தொலைந்த வாழ்க்கை

அப்பா சொல்லி திருந்தவில்லை
அம்மா சொல்லி திருந்தவில்லை
ஆசான் சொல்லி திருந்தவில்லை
ஊரார் சொல்லி திருந்தவில்லை
உறவுகள் சொல்லி திருந்தவில்லை
உறவுக்காக ஏங்கித் தவிக்கும்
உதிரம் வற்றிப் போய்ப்
உயிர் வாழ்பவன் கதையிது


அன்பையே அரணாய் கொண்டு
அனுதினமும் வாழும் அன்னைக்கும்
வாய்மையின் வழிநின்று
நெறி தவறா வாழ்வை
நாள் தோறும் கற்றுத்தரும்
நல்லதொரு வாத்தியாருக்கும்
வாரிசாய் வந்து பிறந்தவன் நான்

வறுமை அறியா வாழ்வில்
செல்வச் செருக்கில்
பள்ளிக்குச் சென்றேன்
படிப்பது வரவில்லை
தரணி புகழும் தந்தைக்கு பிறந்தவன்
தற்குரியாய் தறுதலையாய் வளர்ந்தேன்

கல்வி வரவில்லை இந்த கயவனுக்கு
கலைகள் பல கற்றேன்
அறநெறி கூறும் கலைகள் அல்ல அது
அகிலம் தூற்றும் கலைகள் அது
மது மாது சூது என
மன்மதனாய் மாறிப் போனேன்
பிஞ்சினிலே பழுத்து
பித்தனாகித் திரிந்தேன்அரசு உத்தரவின் படி தேர்வு எழுதினாலும்
தேர்ச்சிப் பெறாமல் வகுப்பு மாறிமாறி
பள்ளிக்குச் சென்றேன்
பத்தாம் வகுப்புவரை படித்தேன்
பள்ளிப் படிப்பைவிட
பலான படிப்பினில் பட்டம் பெற்றேன்


பெற்றவர் அறிவுரை
பெருங்கடலில் கரைத்த காயமென ஆனது
காலம் கடந்தது கட்டிளம் காளையென
கட்டுக் கடங்காமல் திரிந்தேன்
மனைவி ஒருவள் வந்ததால்
மனம் மாறுவான் என
மற்றவர்கள் சொல்லக் கேட்டு
மணமுடித்து வைத்தனர் பெற்ற்றோர்


பலான பெண்களிடம்
பலமுறைச் சென்றதனால்
பள்ளியறை ஒன்றும்
புதிததாக தெரியவில்லை
கரிசல் காட்டிலும்
களத்து மேட்டிலும்
கள்ளக் கலவி செய்தவனுக்கு
கள்ளமில்லாஉள்ளம் கொண்டு
மல்லிகை மனம் வீச காத்திருந்த
மங்கையிவள் மோகம் தீர்த்து
காம விருந்து வைத்திடும்
விலையில்லா விலைமகளென தெரிந்தாள்


கரம் நீட்டி கட்டியணைத்து
சிரம் கோதி சிக்கெடுத்து
செம்பவள இதழ் சுவைத்து
மெல்லிடை தொட்டு
மேனியெங்கும் சிலிர்க்க
கால் மெட்டி தழுவி
கதைகள் பல பேசும்
இன்பம் பொங்கும்
இரவாக அமைந்திடும் என்று
காத்திருந்த கன்னிக்கு
தனியாக வந்த புள்ளிமானை
வெறி கொண்ட புலியென அவள்
அங்கம் புசித்து அடங்கிப்போனேன்
தாலிகட்டி தாரமென வந்த
மங்கையின் மனதில் கலக்கம்
மஞ்சள் கயிற்றின் ஈரம் காயும் முன்னே
கணவனாக வந்த இவன்
காமம் கொண்ட கள்வனோ இல்லை
கலவிக்காக மட்டுமே என்
கரம் பிடித்த கயவனோ என
கலங்கி கண்ணீர் வடித்தாள்
முதல் இரவே அவளின்
கனவுகள் தொலைந்த கானல் இரவானது

அடிவயிறு பசித்தாலும்
அதற்குகீழே பசித்தாலும்
கால நேரமின்றி என் பசிபோக்க அவள்
நெஞ்சில் ஈரமின்றி
நெருப்பள்ளி தெளித்தேன் அவளை
நெருஞ்சி முள்ளென வதைத்தேன்
காலம் கடந்தது அவள் மேனியின்
கோலம் ( அழகு) சிதைந்தது
கோவில் சிலையென வந்தவள்
சிதைந்த கோவிலின் சிலையென ஆனாள்
சிற்றின்பத்தின் விளைவாக
சிசுவை சுமந்தபடி சிரிப்பை மறந்தவள்
சிந்தை தொலைத்து சிந்திக்கவும் மறந்தாள்


பால் பிடித்த பயிர் போல
சூல் கொண்ட பெண்ணிவள்
வாழ்வெனும் காற்றினிலே
வசந்தம் தொலைத்து வளைந்தாடினாள்
வாயும் வயிறுமாக இருந்தவள்
வருடத்தின் முடிவில்
வாரிசொன்றை பெற்றாள்


பிள்ளைப் பிறந்த செய்தி கேட்டு
பிடிக்காமல் பார்க்கச் சென்றேன்
பெண்ணாகப் பிறந்ததால் எனக்குப்
பெருஞ்சுமை எனக் கூறி
பெற்றவள் மனதில்
பெரு வேல் கொண்டு
காலத்திற்கும் அழியாத
காயம் ஒன்றை பரிசாகத் தந்தேன்


நாட்கள் கடந்தன ஆனால்
நானோ மாறவில்லை
குடியும் குடித்தனமுமாக இருந்த நான்
குழந்தையின் அழுகுரல் கேட்டு
தொட்டில் பக்கம் சென்றேன்
பால் மனம் மாற பச்சிளம் குழந்தை
சிறு நிலவென வட்ட முகம்
மல்லிகை மலரென
மயக்கம் தரும் கண்கள்
சின்னஞ்சிறு பிஞ்சுவிரல் கண்டேன்
வறண்ட நிலத்தில்
வான்மழையின் சிறு துளியென
பொக்கை வாய் திறந்து எச்சில்
சிரிப்பொன்றை பரிசாய் தந்தது


என்னை மறந்தேன்
எடுதள்ளி மார்போடனைதேன்
முரட்டு விரல் பற்றியதால்
முல்லைமலர் முகம் மாறியது
பிள்ளையின் அழுகுரல் கேட்டு
ஆடிக்காற்றில் சிக்கிய துரும்பென
அன்னையவள் ஓடிவந்தாள்
ஆவேசம் கொண்டாள்

பாட்டிலும் கையுமாய்
பரத்தையின் பின் செல்லும்
பதரே உனக்கு பாசம் ஏதடா ?
பழிக்கு அஞ்சா பாதகனே
வழித்துணையாய் வந்தவளின்
வாழ்வை தொலைத்தவனே என
வசை மாறி பொழிந்தாள்
வாய் வலிக்கும் வரை.


என் நிலை மறந்தேன் மனதினில்
எனையே வெறுத்தேன்
இருகரம் கூப்பித் தொழுதேன்
இறைவா எனஅழுதேன்
தவறுணர்ந்து தரையில் விழுந்து
தாரமவள் தாள்பற்றி கண்ணீர் வடித்தேன்


காலம் மாறும் காயங்கள் ஆறும்
கலங்காதிரு மனமே உன்
கனவு நனவாகும் ஓர் தினமே என
வசந்தமெனும் வெண்ணிலவின்
வருகையை நோக்கி
வழி மேல் விழி வைத்துக்
உறவுக்காக ஏங்கிக் காத்திருக்கும்
உதிரம் வற்றி வாழ்பவன்
உண்மைக் கதையிது

எழுதியவர் : ஆர் கருப்பசாமி (7-Apr-20, 1:57 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
பார்வை : 228

மேலே