அன்பே
என் ரகசியத்தின் அழகியல் நீ
ஊமையாகிப்போன மனதுள்
ஓராயிரம்முறை
உன் பெயரினை உச்சரிக்கிறேன்
என்னுள் நீ கடத்தும்
பேரன்பின் வெளிச்சத்தில்
கரைந்து மறைகிறது
நம் தூரங்கள்..
ஒவ்வொரு விடியலிலும்
உனக்கான செய்தி ஒன்றேனும்
உருவாகிவிடுகிறது..
இன்னும் சிலநாட்களில்
வரப்போகும்
ஒரு சிறந்தநாளின் வாழ்த்துக்களை
இப்போதே சமர்ப்பிக்க விரும்புகிறேன்
சிந்தனையின் சிகரத்தில்
அமர்ந்துகொண்டு
வேறெதையும் சிந்திக்க தடைசெய்கிறாய்..
கொஞ்சம் ஒதுங்கிக்கொள்
உனக்கான வாழ்த்தினை
வரைந்துகொள்கிறேன்..
Rafiq