குஞ்சுப்பறவை

மாமரத்துக் கூட்டில் மைனா ஒன்று
தானிட்ட முட்டைகளை
தன் எதிரிகளிலிருந்து
காப்பாற்றி அடைக்காத்து வந்தது
நேரமும் கூடியது
முட்டையிலிருந்து வெளி வந்தன
அழகிய மைனா குஞ்சுகள்
சிவந்த சிறு வாயைத்திறந்து
தாய்ப்பறவை தரும் உணவிற்காக
ஏதோ சப்தம் எழுப்பி காத்திருக்க
மைனாவும் வந்தது வாயில்
சிறு சிறு புழுக்கள் ஏந்தி
திணித்தது இத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாய்
பசியால் தவிக்கும் குஞ்சுகளுக்கு
நாட்கள் சென்றன
இதோ குஞ்சுகள்....... சிறகு முளைக்க
மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க.......
தாயைப்போல சுதந்திரமாய்ப்
பறந்திட ஆசை ...... ஆனாலும் பயம் உள்ளத்தில் !
பார்த் துக்கொண்டே இருந்தன
தாயின் சிறகு விரிப்பை
அதில் ஒரு குஞ்சு ......
பிஞ்சிலேயே பழுத்துவிட்டதோ
கூண்டை விட்டு சற்றே வெளிவந்து
தன் சிறகை i விரிக்க பார்க்க .....
விரியாத சிறகு..... வானிலிருந்து
'பாரசூட்' குடை விரியாது
மண்ணில் விரைந்து மோதி மடிந்தவன் போல்
கூட்டிலிருந்து மண்ணில் விழுந்து
துடித்தது குஞ்சு மைனா ......
அவ்வழியே சென்ற பூனை ஒன்று
குஞ்சு மைனாவைக் கவ்வி எடுத்துக்கொண்டு
ஓடியே விட்டது .....

மனித வாழ்விலும்
தாய் தந்தையரை மதிக்காது
முளைத்து மூனிலை முளைக்க
சில சிறுசுகள்.... எல்லாம் அறிந்ததுபோல்
நினைத்து ஈடுபடும் செயல்களில்
தோல்வி காண்பது .....

முறையாய்க் காத்திருந்த மைனா குஞ்சுகள்
சிறகுகள் முளைத்து முற்றுப்பெற
பறக்க எத்தனிக்க.....முயன்று முடிவில்
கூண்டை விட்டே வெளியேறினவே சுதந்திரமாய்!

கட்டுப்பாடும் பொறுமையும் இருந்தால்
வாழ்வில் முன்னேறலாம் பெரியவர்கள்
வழிகாட்டில்….. இதை உதாசீனம் செய்தால்
குஞ்சு மைனாக்கு ஏற்பட்ட கதியே வாழ்வில் ;
இளைஞரே இதை புறக்கணிக்காதீர்
....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Apr-20, 1:33 pm)
பார்வை : 92

மேலே