அன்புடன் இருப்போம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

அன்புடன் இருப்போம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

படித்தவன் புத்திசாலி
படிக்காதவன் முட்டாள்
பணக்காரன் திறமைசாலி
ஏழை திறமையற்றவன்
வெற்றி பெற்றவன் மூளை தங்கத்தில் ஆணதா
தோல்வியுற்றவன் மூளை களிமண்ணால் ஆணதா
ஏற்ற தாழ்வு நிறைந்த சமூகம்
கிழ்தரமான பாகுபாடுள்ள சமூகம்
இப்போது எல்லாம் தலைகீழ்
முற்றிலும் முடங்கிவிட்ட மனிதன்
படிக்காத நண்பர் தான்
தினமும் குப்பை அள்ளுகிறார்.
படிக்காத சகோதரர் தான் காய்கறி விற்கிறார்.
படிக்காத தம்பி தான் தண்ணீர் கேன் போடுகிறார்.
படிக்காத அண்ணன் தான் கேஸ் சிலிண்டர் கொண்டு வருகிறார்.
பணம் படைத்தவர்களே
மெத்த படித்தவர்களே
இதுவே நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள தக்க சமயம்
அடிப்படை தேவை அனைத்தும் பூர்த்தி செய்வது எப்போதும் படிக்காத நண்பர்களே

நான் கேட்கிறேன்
சிவில் இன்ஜினியரிங் படித்தவர்
எங்கள் குயவர் அழகாக வடிக்கும் மண் பானை செய்ய முடியுமா
ஆர்கிடேக் படித்து நபர்
எங்கள் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஒரே ஒரு சிலையை வடிக்க முடியுமா
முனைவர் பட்டம் பெற்ற
தமிழ் பேராசிரியர்
எங்கள் கவிஞர் கண்ணதாசன் போல் கவிதை எழுத முடியுமா
மெத்த படித்த மருத்துவர் எங்கள் சித்தர் திருமூலர் போல் வைத்தியம் பார்க்க இயலுமா
கல்வி என்பது ஒரு சமூகத்தை முன்னேற செய்யும்
அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை
ஆனால் கல்வி மனித சமூகத்தை ஏற்ற தாழ்வு ஏற்படுத்த சொல்லவில்லயே
தற்சார்பு கொள்கையை கடைபிடிக்க எப்போது மனிதன் தவறவிட்டானோ
அன்றே அவன் வாழ்க்கையின் வசந்தத்தை
கொஞ்சகொஞ்சமாக இழுக்க தொடங்கினான்.
நகரங்களை நோக்கி என்று நகர தொடங்கினானோ
அன்றே அவன் இயந்திரமாகிவிட்டான்.
எல்லாம் பணம் செய்த மாயம்.
உலகில் எவ்வளவு தான்
தொழில் புரட்சி செய்தாலும்
அடிப்படை விவசாயம் இல்லையேல் மானுடம் இல்லையே
இந்த உணவு எப்படி வருகிறது
இந்த அற்புத உணவின் காரணகர்த்தா யார்
என்று நம் குழந்தைகளுக்கு என்றாவது நாம் சொல்லி கொடுத்திருப்போமா.
ஒரு பேச்சுக்கு இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் உயிர்ந்த நபராக இருந்தாலும்
அந்த நபர் என் ஒரு ஏழை விவசாயிக்கு சமம் ஆகமாட்டார்.
நண்பர்களே எல்லோரும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை
பணம் நிறந்திரம் இல்லை
நிலைமை நிலையானது இல்லை
பாகுபாடு வேண்டாமே
ஏளன எண்ணம் வேண்டாமே
ஈகோ வேண்டாமே
சக மனிதனை எந்த நிலையிலும் நேசிப்போம்
ஆதரிப்போம்
அனைவரும் அன்புடன் இருப்போம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (10-Apr-20, 9:49 pm)
பார்வை : 274

மேலே