கொரோனா

மனித பூச்சிகளுக்காய்
இயற்கையின் கடிதம்...


நான் கொண்ட வளத்தினையும்

வீண் கொள்ள வைத்து

நாளுக்குநாளாய் நீ நாகரிகம்
- வளர்த்து

கனிம வளங்களையே கண்
- அசைவில் சிதைத்து

கண்ட வாயுவையே காற்றினிலே
- விதைத்து

கண் கண்ட நீரினையும் கானல்
-நீராக்கி

புண் கொள்ள செய்தாயடா - நல்

மண் கொண்ட நிலத்தினையே

நீ இழைத்த கொடுமைதனில்

ஈன்றெடுத்தேன் கொரோனாவை

கொன்று போக துடிக்கின்றன - இக்

கொடுமை இழைத்த பூச்சிகளை

மாண்டு போகுமோ மனித இனம்
- இனியேனும்

மனம் திரும்புமோ இயற்கையிடம்.....

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (13-Apr-20, 9:04 am)
பார்வை : 247

மேலே