அஞ்சுவது அஞ்சாமை
அஞ்சுவது அஞ்சாமை
************************
அஞ்சுவதற்கு அஞ்சாதவர்
---அருமையை அறியாதவர்
அறிவினால் யாவையும்
---அறிந்து கொள்பவரே
அழிவின்றி வாழ்வான்
---அழுதழுது தேயான்
தொற்றி வரும்
---கொரோனவை வீழ்த்தவே
தொல்லையின்றி வாழ்ந்துடவே
---தொலைவாய் வாழ்வோம்
அஞ்சுவது யாவும்
---தவறாகி போகாது
அவமானம் கொள்ளாது
---ஆற்றலால் உயிர்வாழ்வோம்
உறையுமா மூச்சுக்காற்று
--உன்னையன்றி இருள்கூடுமா
உயிரை காத்திடவே
---உனக்கு வழியுண்டு
உரிமையுண்டு ஒளியுண்டு
---ஊன்னென கொள்ளும்,
உடலினை மரணத்தின்வாசலிலே
---உண்மையாக புதைக்கவே
உடனே அமரலாமா
அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைமை
---உணர்வாய் சிந்தனைகொள்
கவிச்சுடர் அகிலன் ராஜா
கனடா