எல்லாம் நன்மைக்கே

அந்த நாய்க் குட்டிக்கு காலையிலிருந்து பசி. எங்கும் அதன் வாய்க்கு அகப்படாத உணவு அதன் வயிற்றை படாதபாடு படுத்தியது.சுற்றும் முற்றும் தேடி ஒரு கட்டத்தில் சோர்ந்து போனது.

அப்பொழுது குப்பைத் தொட்டியில் யாரோ ஒருவர் பைநிறைய எதையோ கொட்டி செல்ல அதை நோக்கி ஓடிய நாய்க்குட்டியை ஏற்கனவே அந்த குப்பைத் தொட்டிக்குள் குடியிருந்த இரண்டு நாய்கள் வெறியூரிய பற்களைக் கொண்டு குரைத்து அதனை விரட்டின. பசி மயக்கத்தோடு நாய்க்குட்டி தெருவில் நடந்து கொண்டிருக்க, திடீரென ஒரு லாரி அப்போது பாய்ந்து வந்தது.

அந்த நாய்க்குட்டி கொட்டிய டீபன் பாக்ஸிலிருந்த உணவை ருசித்துக் கொண்டிருக்க, அருகே சாலையோரத்தில், இரத்த வெள்ளத்தில் மிதந்த சீருடை நனைந்த தன் பையனை, கையில் வைத்துக்கொண்டு, அடிப்பட்ட தந்தை அழுதுக் கொண்டிருந்தார். அவர் அருகே பைக் ஒன்று சுக்கு நூறாக நொறுங்கியிருந்தது.

"லாரி காரன் இடிச்சுட்டு போயிட்டான்" கூட்டத்தில் இருவர் பேசிக் கொண்டிருக்க, பசி தீர்ந்த நாய்க்குட்டி தன் இருப்பிடம் நோக்கிச் சென்றது படுத்துக் கொள்ள...

முற்றும்.

எழுதியவர் : S.Ra (13-Apr-20, 3:43 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : ellam nanmaikkE
பார்வை : 164

மேலே