தமிழ் புத்தாண்டு 2020

சார்வாரி ஆண்டு
(அறுபதாண்டு கணக்கில் முப்பத்தி நான்காம் ஆண்டு ) பிறந்தது

இந்த சாதிவாரி ஆண்டி சர்வாதிகார கொரானாவை ஒழிக்கட்டும்.நன்மைகள் மலரட்டும்.
ஆள்கொள்ளும் கொரானா ஒழியட்டும்
நமக்கு ஒரு வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுத்ததே
பணக்காரனென்றும் ஏழையென்றும் பிரித்துப் பார்ப்பதில்லை
ஒரு வயதோ என்பது வயதோ கணக்குப் பார்ப்பதில்லை
அமெரிக்காவோ அப்பிரிக்காவோ கண்டம் பார்ப்பதில்லை
இந்துவோ கிறிஸ்துவோ இஸ்லாமோ மதம் பார்ப்பதில்லை
மருந்து கிடைத்தபாடில்லை
தொழில்நுட்பம் வளர்ந்த ஐரோப்பாயென்று பார்ப்பதில்லை
படித்த படிக்காத ஆட்கள் என்று பார்ப்பதில்லை
பிரதமர் பிச்சைக்காரன் என்று பார்ப்பதில்லை
வந்தால் கூட சேர்ந்தவரியும் அள்ளிக் கொள்கிறது
ஒன்பது கிரங்களும் தனக்குள் என மார்தட்டும் அமெரிக்காவை சீரழித்ததே
சொர்க்கமாக இருக்கும் ஐரோப்பாவை நிலைகுலைய செய்தேதே
ஆப்பிரிக்கா இந்தியாவிற்கு மட்டும் பாவம் பார்த்தது போல
மிருகங்கள் உலாவ , சுத்தமான காற்றை சுவாசிக்க
ஒரு வழி செய்ததே
கோடி கோடியாய் பணம் வைத்தவனையும்
சோத்துக்கு இல்லாதவனிடம் கை எந்த வைத்ததே
இந்த தமிழ் புத்தாண்டு
மண்ணாசை , பொன்னாசை , பொருளாசை
இதுவே மனிதனுக்கும் மிருகங்களுக்கும்
உள்ள ஒரே வித்தியாசம்
இருக்கும் ஒரு வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்ந்திடுவோம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று எழுதி வைத்தார்களே
இந்த தமிழ் புத்தாண்டில்
நம் மனம் தெளிவு பெற்று நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோமாக

எழுதியவர் : கவிராஜா (14-Apr-20, 12:04 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 77

மேலே