தீண்டாத தீயவை

தீண்டாத் தீயவை

எழ பிறப்பும் தீயவைத் தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின். (திருக்குறள் 7/2)


பிறர்பழிப்ப நீக்கி அறன்செய்நன் மக்களை
பெற்றார்க் கெழுபிறப்பும் தீமை -- இராப்போம்
எவர்க்கும் பிறப்பேழ்மா. றாவள் ளுவன்சொல்
எவர்விளித்தார் முன்னம் உலகில.


எதையும் சுருங்கச் சொல்லிப் பலதைவிளங்க வைக்கும் குறளாகையினால் ஒளவை யார்
அனுவைத் தொளைத்தேழ் கடலை புகட்டிக் குறுகத் தரித்தக்குறள். என்று புகழ்ந்துள்ளார்.

இந்த பிறப்பில் ஒருவருக்கு பிற நல்லவர்கள் பழிக்கக் கூடிய செயல்களைச் செய்யாத
நல்ல பண்புடைய குழந்தைகள் அமையப் பெற்றால்,, பெற்றவர்கள் தாம் மீண்டும்
பிறத்தலாகிய ஏழு பிறப்பிலும் மனம்நோகும்படியான தீவினைகள் அவரை அண்டிவர
பயந்து விலகுமாம். அப்படி குழந்தைகளை பெற்றோர் நல்லவர்களாக வளர்க்க வேண்டிய
கடமை உள்ளது என்பதை இக்குறள் வலியுறுத்து கிறது. இது தலையாயக் கடமையே
"அறிவுடை சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே "(புறனாநூறு ); 2. பெரிதுவப்பள்
தம்மகனைச் சான்றோனெனக் கேட்டத்தாய் (திருக்குறள்) பறை சாற்றுகின்றது. நமக்கு
நல்ல நடத்தை குணமும் இருந்தால்தான்நம் மக்களை நல்லவர்களாக வளர்க்க முடியும்.
அதுவும் தாயும் தந்தை இருவருமே நல்லகுணம் படைத்திருக்க வேண்டும். அப்படிப
பட்டவகள்தான் இக்குறளை பின்பற்றி தம் மக்களைநல்ல வழியில் நடக்கமுடியும்.
அப்படிப் பட்டவர்களுக்கு இயற்கை அந்த பெற்றோருக்கு வரும் ஏழு பிறப்பிலும் தீயத்
துன்பங்கள் அவர்களை அண்டவிடாது துரத்துமாம்.இந்த ஒரு குறள் உலகிலுள்ள
அனைத்து நீதிகளையும் ஒன்றுக்குள் ஒன்று அடக்கி சூசகமாக உணர்த்துகிறது.
அப்படி நல்ல பிள்ளைகளைப் பெற்றோர் வளர்கப் பிள்ளைகள் நாட்டுப் பற்றுள்ள
குடிகளாக வளர்வார்கள். அவர்கள் அறீவீலிகள் பேச்சைப் புறந்தள்ளி நாட்டை
அவர்கள் அறிவு கொண்டு நல்ல நாடாக மாற்றி நாட்டில்ஞானத்தை ஒன்றுபட்டு
வளர்ப்பர். நாடே தெய்வீகமாகமாறும்.

இக்குறளில் உலகம் ,இறைவன் . மற்றும் இயற்கையின் இரகசிய நீதியான ஏழ் பிறப்பு
இவற்றை மக்களுக்கு அம்பலமாக்குகிறது.. எந்நாட்டு மக்களும் அறிந்திராத
ஏழு பிறப்பின் ரகசியத்தை இக்குறளை படைத்த நாட்டில் இக்குறளை ப்படித்த பின்னும்
தமிழ் மக்கள், இறந்த பின்பு மீண்டும் மீண்டும் மொத்தம் ஏழு தடவை பிறக்கிறது எனும்
பெரிய ரகசியத்தை ஏற்கனேவேஅறிந்திருந்த பின்னும்அறிவிலிகள் சொல்படி
நடிக்கிறார்கள் நடக்கிறார்கள்.. உலகப்பொது மறை என்கிறார்களே அவர்கள் ஏற்றுக்
கொள்வார்களா ? இந்தக் கொள்கையை ஏகக்கொள்கையாக?. மற்ற மதத்தார் உலகம்
அழியும்போதுதான் ஆத்மாக்கள் உலகில் வாழ்ந்தபோது செய்த நன்மை தீமைகளின்
படி நரகம் சொர்கத்துக்கு அனுப்பப் படுவார்களாம். அந்த மதங்களில் ஏழு பிறப்பு ,
இறந்தவன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான் என்ற தத்துவத்தை அறிந்தி ருக்கவில்லை.
இந்த ஏழு பிறப்பை வள்ளுவர் சுமார் 13 குறள்களில் வலியுறுத்துகிறார்..எதையும் இப்படி
வலியுறுத்தி சொல்ல . இவ்வளவு குறளகளை வள்ளுவர் ஒதுக்கியதில்லை. எழ்பிறப்பின்
இரகசியம் அறிந்தவர்கள் இந்து மதமெனும் அறுவகை மதமே. அதில் சைவம் வைணவ மும் அடங்கும். (தொடரும்)

எழுதியவர் : பழனி ராஜன் (14-Apr-20, 3:28 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே