BIKE 🏍️🏍️ இருசக்கர வாகனம்

                     BIKE ( இருசக்கர வாகனம்)🏍️

இதயத்தோடு இணைந்த இதயம் இல்லாத இம்சை அரசி எலிசபெத் இவள்....🏍️🏍️

இரு கால்கள் உடைய மனிதர்களை விட என்ஜின் உடைய இருசக்கர எலிசபெத் போதும்....🏍️🏍️

இந்த காலத்தில் இரு இதயம் சேர இருசக்கர எலிசபெத் தேவை.....🏍️🏍️

தொலை தூரம் சென்றாலும் தொல்லை இல்லாத உறவு இவள்......🏍️🏍️

ஹெட்லைட் என்னும் விளக்கை ஏற்றி விடியவிடிய ஊர்வலம் கூட்டி செல்வாள்....🏍️🏍️(headlight)

வலதுபுறம் வளைய போறேன் என்று கண்ணடித்து அனைவருடைய கவனத்தை இருப்பாள்....🏍️🏍️(indicator)

இடைவேளை விட்டு அமர்ந்திருக்கும் காதலியை கட்டியணைக்க செய்ய கைவசம்  இரு தூதர்கள் உள்ளனர்.....🏍️🏍️(brakes)

இவள் பாட ஆரம்பித்தாள் ஊரே இவள் பாட்டைக் கேட்கும்...🏍️🏍️(silencer)

பெண் இனமே பார்த்து ரசிக்கும் ராட்சசி தோற்றம் உடையவள்......🏍️🏍️

இவ்வுலகில் இவள் கால் அச்சி படியாத இடமே இல்லை....🏍️🏍️(tyre)

எந்த பிரச்சனை வந்தாலும் இதயத்தை இமயமலை போல அமைதியாய் வைத்திருப்பாள்....🏍️🏍️(engine)

இனிமையான உலகத்தை விட்டு எமனிடம் போக போகிறாய் என்று கணித்து சொல்லும் ஜோதிடர்...🏍️🏍️(speedometer)

வயிறு காலியாகி பசிக்க தொடங்கிவிட்டால் கண் இமைக்க ஆரம்பித்துவிடுவாள்...🏍️🏍️(fuel indicator)

அவள் வயிற்றின் வடிவத்தைக் கண்டு வளைய தளத்தில்  தேடாத தேவதாஸ் இல்லை.....🏍️🏍️(tank)

அவள் ஓடும் வேகத்தை கூட்ட ஆறு(6) விதமான வித்தைக்காரர்கள் உள்ளனர்...🏍️🏍️(gears)

இவள் பின்னழகை கண்டு பின்னால் சுத்தாத சுந்தரனே இல்லை...🏍️🏍️(tail light)

வேகமாய் சென்றால் எமனுடைய சொந்தகாரிய  மாறிவிடுவாள்...🏍️🏍️(speed)

மனிதனால் உருவாக்கப்பட்ட  இவள் என் மனதை படிக்கும் மனோதத்துவ மருத்துவர் .....🏍️🏍️🏍️

எழுதியவர் : வினோத் குமார் (15-Apr-20, 11:08 pm)
பார்வை : 82

மேலே