WFH - நவீன திருவிளையாடல்

WFH - நவீன திருவிளையாடல் :-

என் கல்லூரித் தோழர் திரு. குமரகுரு. சிறந்த சிவபக்தர். அவரு மட்டுமல்ல - அவங்க குடும்பமே சிவபக்தியுடைய குடும்பம். அவர்கள் அனைவருமே சிவன் அருளை பெற்றவர்கள்....

இன்றைய சூழலுக்கு சிவனருளைப் பெற்ற என் கல்லூரித் தோழரை சிவனாகவும் -என்னை தருமியாகவும் வைத்து எழுதப்பட்ட நகைச்சுவை உரையாடல் இது.

நவீன திருவிளையாடல் :-

சொக்கா...
சொக்கா...
இந்த நேரம் பார்த்து எங்காய போயிட்ட..

இந்த ஊரடங்குல
என்னை மட்டும் தனியா புலம்பவிட்டுட்டு
நீ மட்டும் நிம்மதியா எங்காய போயிட்டா..

வரமாட்டியா..
சொக்கா...
கால் வயித்துக்கு கஞ்சிக்கு இப்படி வீட்டுக்குள்ளியே நடையா நடக்கிற..
சீக்கிரம் வா சொக்கா...

ம்....ஹூ..
அவன் சீக்கிரம் வரமாட்டான்...
வரமாட்டான்...
வரமாட்டான்...
வரமாட்டான்...

தருமியே
நான் வந்துவிட்டேன்..
ஏன் இப்படி புலம்புகிறாய்..?
உனக்கு என்ன வேண்டும்....?

உமக்கென்ன
வேலா வேலைக்கு எல்லாம் வந்துடும்..
ஆனா
எனக்கு அப்படியா...?
இந்த ஊரடங்கு போட்றதுக்கு முன்னாடியே
என் வாழ்க்கை தகிடத்தோம இருந்தது...
இப்ப சொல்லவே வேண்டாம்..
தினமும் தரிகிடத்தோம இருக்கு..

தருமி
உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள்
நான் தருகின்றேன்...

நான் என்ன கேட்டாளும் தருவீங்களா...?

நிச்சயமாக தருகின்றேன் தருமி....

சரி..
எனக்கு இந்த ஊரடங்குல
வெர்க ஃப்ரம் ஹோம் வேலை வேணும் வாங்கி தரமுடியுமா...?

ஹா.....ஹ
ஹா....ஹ
வெர்க் ஃப்ரம் ஹோம் வேலைதானே..
நிச்சயமா தருகிறேன் தருமி..

இல்லை...
இல்லை
நீங்க சிரிக்கிறத பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு...

தருமியே -
உனக்கு சந்தேகம் இருந்தா என்னை பரிசோதித்து பாரும்...

ம்...
பரிசோதிக்கிற..
பரிசோதிக்கிற..
என் பர்சே இன்னிக்கு சோதனையிலதான் இருக்கு..
பரிசோதித்து தானே ஆகனும்...

தருமியே கேள்வியை நீ கேட்கிறாயா..?
இல்லை நான் கேட்கட்டும்மா..?

சொக்கா
எனக்கு நினைவு தெரிஞ்சு
எக்ஸாம்ல பதில் எழுத வேண்டிய இடத்துல கூட , கேள்வியதான் எழுதியிருக்க...
நானே கேள்விய கேட்கிறேன்..
நீர் பதில் மட்டும் சொல்லும்...

சரி தருமி -
கேள்வியை நீயே கேளும்...

சொக்கா..
தயாராக இருங்கள்...

நீர் கேள்வியை கேளும் தருமி...

சரி..சரி...

கேள்வி : வெர்க ஃப்ரம் ஹோமில் சொல்லக்கூடாதது..?

பதில் : மனைவியிடம் வேலையின் எளிமையை

கேள்வி : சொல்லக்கூடியது...?

பதில் : மனைவியிடம் வேலையின் கடினத்தை

கேள்வி : கேட்க கூடாதது...?

பதில் : டார்கெட்டை

கேள்வி : கேட்க கூடியது...?

பதில் : ஸ்நாக்ஸ் பாக்கெட்டை

கேள்வி : சேர்ந்து கொண்டே இருப்பது..?

பதில் : ஃபென்டிங் ஃபேட்ச்சும்-இன்கம்மிங் பேட்ச்சும்

கேள்வி : சேராமலிருப்பது...?

பதில் : நெட்வெர்க் டவரும் - எலக்டிரிக் பவரும்

கேள்வி : அணியக் கூடாதது...?

பதில் : பேன்ட்டும் சர்ட்டும்

கேள்வி : அணியக் கூடியது...?

பதில் : ஹாப் ட்ரவுசரும் - கட் பனியனும்

கேள்வி : ப்ரேக் டைம்ல செய்யக் கூடாதது...?

பதில் : ஆபிஸ் வேலையை

கேள்வி : ப்ரேக் டைம்ல செய்யக் கூடியது..?

பதில் : வீட்டு வேலையை

கேள்வி : வீட்டு வேலைகளிலிருந்து தப்பிக்க வழி...?

மனைவி : ஆபிஸ் வேலையை செய்வதுபோல பாவனை செய்வது

கேள்வி : ஆபிஸ்ல சூடாக கிடைப்பது...?

பதில் : போண்டா - டீ

பதில் : வீட்ல சூடாக இருப்பது...?

கேள்வி : பொண்டாட்"டி"

கேள்வி : ஆப்-லைனில் இருக்க வேண்டியது...?

பதில் : செல்போனும்-இமெயிலும்

கேள்வி : ஆன்-லைனில் இருக்க வேண்டியது...?

பதில் : வாயும்- கையும் ( சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறது )

கேள்வி : மறந்து போவது...?

பதில் : ப்ராஜெக்ட் இ்ன்ஸ்ட்ரக்சன்

கேள்வி : மறக்காமலிருப்பது...?

பதில் : மனைவியின் இன்ஸ்ட்ரக்சன்

கேள்வி : சோர்ந்து இருப்பது...?

பதில்: கண்களும் - கைகளும்

கேள்வி : சேர்ந்து இருப்பது...?

பதில் : தூக்கமும்-சிஸ்டமும்

கேள்வி : ஆபிஸ்ல பாஸ்வேர்டா இருப்பது...?

பதில் : காதலியின் பெயர்

கேள்வி : வீட்ல பாஸ்வேர்டா இருப்பது..?

பதில் : மனைவியின் பெயர்

கேள்வி : மாத முதலில்...?

பதில் : நோ டென்சன்

கேள்வி : மாத இறுதியில்...?

பதில் : எக்ஸ்டன்சன்

கேள்வி : நக்கலா பேசுவதற்கு...?

பதில் : தருமி

கேள்வி : சோக்கா பதில் சொல்றதுக்கு...?

பதில் : சொக்கநாதன்

கேள்வி : பேட்ச் அலேக்சனுக்கு...?

பதில் : நான்

கேள்வி : வேலை செய்வதற்கு...?

பதில் : நீ

ஐயா.. சொக்கா...
ஆளைவிடு...
நீ பெரியாளு..

அப்ப நீ...?

நான் சித்தாளு...

நீங்க இந்நிக்கே ..
வெரக் ஃப்ரம் ஹோம ரெடிபன்னிடுங்க...
நான் அந்த வேலையே செய்யுற..

அப்படி ஆகட்டும்...தருமி......!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (18-Apr-20, 4:58 am)
பார்வை : 101

மேலே