குறுக்குவழி மோஹினி - 1

அவள் யார் ?
அழகே அவள் விழியாக
தமிழே அவள் மொழியாக
விழியால் அவள் கொள்வாளோ
மொழியால் என்னைத் தின்பாலோ?
புன்னகைகையால் கட்டி வைத்தாலே
அவளருகில் போனாலே
பேச வார்த்தைகள் இல்லையே
இதயம் படபடக்கிறதே
மனம் துடிதுடிக்கிறதே
உடம்பும் வெப்பம் ஆனதே
காச்சலை கொடுத்துவிட்டாளே காரணவாயிவள் ?
இதழ் கொண்டு பேச்சால் கவி எழுதிவிட்டாளே
என்னருகில் உன்னை படித்தானே

ஒரு நொடி உன்னைப் பார்க்க ஏங்கிய கண்கள்
அதையே நினைத்து பல நாட்கள் கொண்டாடிய இதயம்

அவ்வுளவு அழகு
வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாதவள் .. ஆயிரம் நபர்கள் கூடியிருக்கும் வேளையிலும் அறுபது வயது கிழவனிடம் கூத்தடிப்பாள். ஏனெனில் அவன் ஒரு மேலதிகாரி. நூறு பேர் கொண்ட அணியின் மேலதிகாரியிடம் ஒட்டி உரசி கூச்சமில்லாமல் பல் இளிப்பாள். இருநூறு பேர் போட்டி போட வேளையில் சம்பந்தேமே இல்லாமல் ஒரு துளி அனுபவமே இல்லாமல் தான் அந்த வேளைக்கு முந்திக் கொண்டாள்
எல்லாம் தனக்கு தெரியும் எனப் பேசுவாள்
சுற்றி இருப்பவர் என்ன நினைப்பார் என வெட்கம் இல்லாதவள்
தெலுங்குகாரி என ஊரார் பேசியதுண்டு
திமிர் பிடித்த மேல்ஜாதி என அவளுக்கு கர்வமுண்டு
கால் மேல் கால் போட்டு தனக்கு கீழ் வேலை செய்பவனை மதிப்பதில்லை
மேலதிகாரி பெண் எனில் நன்றாக ஜால்ரா போடுவாள்
அவளையும் பின்னால் இருந்துக் கொண்டு
அவளுக்கு என்ன தெரியும்
அவள் எல்லாம் முறைவாசல் கழுவ வந்தவள்
அவளுக்கு என்ன தெரியும் என்பாள்
தான் படித்தது வணிகம் என்றாலும் தனக்கு மென்பொருளும் சொல்லிக்கொடுத்தால்
நன்றாக வேலை செய்வேன் என சவால் விடுவாள்
அங்கே கத்துக் கொடுப்பவனை காத்துக்கொள்ளும் வரைக்கும் ஜால்ரா போடுவாள்
உடனே அவனை ஏறி மிதித்து
அவனுக்கு மேல் வந்து விடுவாள்
தான் மேலே வர எல்லா குறுக்கு வழியும் கையாள்வதால்
அவனுக்கு என்ன தெரியும் என மெல்ல அவன் மேலதிகாரியிடமே சொல்வாள்
அவளை ஐஸ் வைக்கவே நான்கு மணி வரை சாப்பிடாமல் காத்திருப்பாள்

ஆனால் அணியில் உள்ள ஆண்களை கிற்ங்கடிப்பாள்
தினமும் புதுத்துணியும் அணிகளுமாய் திரிவாள்
ஏனெனில்
அழகு மோஹினி எதிரே நின்றாள்
மின்னல் அடித்தது
அழகும் சுட்டித்தனமும்
இவளின் உடன்பிறப்பு
உறவு
இவளுடன் உடனிருப்பு
நட்புக்குள் இவளை சுற்றி ஓர் வட்டம்
இவளுக்கென்று ஒரு சட்டம்
இமை உயர்த்தி
மழலைத் தமிழில்
நண்பர் படை சூலச் செய்வாள்
ஆயிரம் பெண்டிர் புடைசூழ வந்தாலும் தனியே தெரிவாள்
மௌனமான சிறப்பு
செதுக்கி வாய்த்த சிலை போல
பேரழகியவள்


இதனாலோ
அவளிடம் வழிபாவனை கவிழ்க்க
அழகையே சாதகமாக பயன்படுத்தி கொள்வாள்

எழுதியவர் : கவிராஜா (18-Apr-20, 5:06 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 85

மேலே