பாட்டி செல்லம்

சிறு வயதில் தனது தாய் மற்றும் தந்தையை விபத்தில் இழந்த அந்த சிறுமி தனது பாட்டி உடன் மதுரையில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தாள். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த சிறுமிக்கு எப்படியாவது நன்றாக படித்து,தனது பாட்டியின் கஷ்டத்தை போக்க வேண்டும் என்றும்,தனது கிராமத்தில் உள்ள மக்களை உயர்த்த வேண்டுமென்றும் பல கனவுகளுடன் வாழ்ந்து வந்தாள். ஆனால் அவளது பாட்டியோ தனது பேத்திக்கு வருங்காலத்தில் ஒரு நல்ல மாப்பிள்ளையை திருமண செய்து வைக்க ஆசை கொண்டாள்,அதனால் அந்த பாட்டி பல இன்னல்கள் இருந்தாலும் தனது பேத்திக்காக இரவு பகலாக வேலைப்பார்த்து சிறு சிறு நகைகளை சேர்த்து வந்தாள். தனது பேத்திக்கு என்றும் தாய், தந்தை இல்லை என்ற கவலை வராமல் பொன் போல் பார்த்து வந்தாள்.

மிக கடின உழைப்பிற்கு பிறகு அந்த சிறுமி தனது பன்னிரண்டாம் வகுப்பை நல்ல மதிப்பெண்ணுடன் நிறைவுசெய்தாள் . அவளுடைய பாட்டிக்கு பெரும் நிம்மதி "அப்பாடா ஒரு வழிய இவ படிப்பை முடிச்சிட்டா, சீக்கிரத்துல இவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிவெச்சிரணும் " என்று பெரும் மூச்சி விட்டாள். ஆனால் அவள் பேத்திக்கோ சென்னைக்கு சென்று மேலும் படிக்க ஆசை. தனது பாட்டியிடம் தனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்ல தயக்கம் ஆனால் வேறு வழியில்லை,”நாம் இப்போது கூறவில்லை என்றால் நமது வாழ்க்கை அவ்ளோவுதான்” என்று அவள் பயந்தாள். வயதான ஆமை போல் மெல்ல சென்று தன பாட்டி பக்கத்தில் அமர்ந்தாள். “ என்ன டி உன்ன சோறு வெடிக்க சொன்ன இங்க என்ன பண்ற” என்று பாட்டி பேத்தியிடம் கேட்டாள். " பாட்டி உன்னிடம் ஒன்னு சொல்லணும் ஆனா நீ கோவப்படக்கூடாது" என்றாள். அதற்கு பாட்டி " பக்கத்துக்கு வீட்டு காமாச்சி சொன்னா, உன்னக்கு கல்யாணம் வேண்டாமாமே?? சென்னைக்கு போய் படிக்க போறீயாமா? என்னடி நெனச்சிட்டு இருக்க, நா பாடைல போறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப்பார்க்கலாம்னு பாத நீ உன் இஷ்டத்துக்கு பண்ணிட்டுயிருக்க " என்று காட்டேரி போல் கத்தினாள்..


அவளுக்கும் அவள் பாட்டிக்கும் கடும் சண்டை முற்றியது . அப்போது அவள் பாட்டி " நீ உன் விருப்பம் போல் வெளியூர் சென்று படி,ஆனால் அதுவரைக்கும் என்னுடன் பேசாதே என்றாள். மிகவும் கவலை கொண்ட அவள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள்,பின்னர் ஒரு முடிவிற்கு வந்தாள். நமது பாட்டி ஒரு நாள் நம்மை புரிந்துகொள்வர் என்று சென்னை சென்று படிக்க தயாரானாள். பாட்டி வெளியே கோவமாக காட்டினாலும்,தன் பேத்தி மீது அதீத பாசம். அவள் சேமித்து வைத்த பணத்தை தன் பேத்தியிடம் கொடுக்க நினைத்தாள். ஆனால் எப்படி கொடுக்கப்போகிறோம் என்று கவலைகொண்டாள். அதற்குள் அவள் பேத்தி ஏதும் கூறாமல் சென்றுவிட்டாள். அதை கண்டு பாட்டி மிகவும் கவலை கொண்டாள்.

காலங்கள் கடந்தன...

ஒரு நாள் பாட்டி வயலில் நெல் அறுவடை செய்துகொண்டிருந்தாள், அப்பொழுது பாட்டியின் பக்கத்துக்கு வீட்டு பெண்மணியான காமாட்சி கையில் ஒரு செய்தித்தாளை எடுத்துக்கொண்டு ஓடிவந்தாள். " பாட்டி… பாட்டி ... இந்த செய்தியை பாருங்கள்", என்று. அதில் சென்னையில் படிக்கும் அவள் பேத்தியின் கல்லூரியில் தீவிபத்து ஏற்பட்டது என்றும்,அதில் பல மாணவர்களுக்கு காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியை கண்டு அதிர்ந்து போனாள்.”என் பேத்திக்கு போன் செய்து பார்த்தாயா” என்று பாட்டி காமாட்சியிடம் வினவ, நான் பலமுறை போன் செய்தேன் ஆனால் அவள் எடுக்கவில்லை” என்று காமாட்சி கூறிய பதில் பாட்டிக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. எப்படியாவது தன் பேத்தியை காண வேண்டுமென்று முடிவெடுத்த பாட்டி, சென்னைக்கு புறப்பட தயாரானாள்.” நான் சென்னைக்கு சென்றுவிட்டு வருகிறேன், அதுவரைக்கும் வயலை பாத்துக்கோ” என்று காமாட்சியிடம் கூறி பேருந்து நிலையத்துக்கு புறப்பட்டாள்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு சென்ற அவளுக்கு மனதில் ஒரே பயம். தன பேத்திக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது என்று மனதில் கடவுளை வேண்டிக்கொண்டு அங்கிருந்த ஒரு பேருந்தில் ஏறி சென்னைக்கு புறப்பட்டாள். நடத்துனர் பாட்டியிடம் “ பாட்டி எந்த ஊருக்கு போகணும்” என்று கேட்க, அவளோ”சென்னைக்கு ஒரு டிக்கெட் கொடுக்குமாறு நடத்துனரை கேட்டாள். நடத்துனரோ “ பாட்டி இது தூத்துகுடி போற வண்டி, நீங்க பேருந்து மாறி ஏறிட்டிங்க” என்றான். அதற்குள் பேருந்து மதுரை எல்லையை கடந்தது. திகைத்து நின்ற பாட்டிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாள். நல்ல குணம் கொண்ட அந்த நடத்துனர், தன்னிடம் இருந்த சிறு பணத்தை பாட்டியிடம் கொடுத்து, அவளை சென்னை செல்லும் பேருந்தில் ஏற்றிவைத்தான். அந்த நடத்துனரை கையெடுத்து கும்பிட்ட பாட்டி சென்னைக்கு புறப்பட்டாள்.

எழுதியவர் : ஆகாஷ் (19-Apr-20, 4:40 pm)
சேர்த்தது : ஆகாஷ்
Tanglish : paatti chellam
பார்வை : 145

மேலே