என் ஐஏஎஸ் கனவு

நான் 4ஆம் ஆண்டு மெக்கனிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் ஒரு சராசரி மாணவன். கல்லூரி படிப்பில் அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும், ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பது என் சிறு வயது கனவு. ஐ.ஏ.எஸ் படிப்பதற்கு நிறைய பணம் செலவாகும் என்று கூறுவார்கள் ஆனால் அது மட்டும் இல்லை,அதை தாண்டி ஐ.ஏ.எஸ் படிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். என் தந்தை கட்டிடவேலை செய்யும் தினக்கூலி தொழிலாளி அதுவும் இல்லாமல் அவருக்கும் வயதாகிவிட்டது. எனது தாய் இருதய கோளாறு உடையவர்.அவருடைய மருந்துக்கு மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும். கல்யாணா வயதில் இருக்கும் என் பாசமிகு அக்கா. என் அக்காவின் திருமணத்திற்க்கு நிறைய செலவாகும், அதை அனைத்தையும் என் தந்தையின் தலையில் போடுவதுற்கு எனக்கு மனமில்லை.

4ஆம் ஆண்டில் எனது கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடைபெற தொடங்கியது. பல மாணவர்கள் பல நிறுவங்களில் தேர்வானார்கள். ஆனால் நானோ அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருந்தேன். என் தந்தையோ என்னை பார்த்து " உன் நண்பன் குமாருக்கு வேலை கடைச்சிடுச்சாமே, உன்னக்கு கிடைக்கலையா" என்று ஆர்வமுடன் கேட்பார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து சென்றுவிடுவேன். ஒரு முனையில் ஐஏஎஸ் கனவு, மறுமுனையில் என் குடும்பத்தின் வறுமை. முதலில் என் மனதில் பட்டது வறுமை தான். ஆதலால் நான் கல்லூரியில் கிடைத்த விருப்பமற்ற வேலையை தேர்வு செய்தேன்.

வெற்றிகரமாக என் கல்லூரி படிப்பை முடித்து நான் வேலையில் சேர்ந்தேன். நான் வேலைக்கு சென்றாலும் என் ஐஏஎஸ் கனவை நான் மறக்கவில்லை. தினமும் வேலைக்கு சென்று வந்தவுடன் இரவு கொஞ்ச நேரம் எனது தேர்விற்கு படிப்பேன், ஆனால் அது மட்டும் என் கனவை நிறைவேற்ற பத்தாது.

இரண்டு ஆண்டுகள் கடந்தன... என் அக்காவின் திருமணத்தை நான் நன்றாக நடத்தி முடித்து விட்டேன். அடுத்த இரு ஆண்டிற்கான பணத்தேவைக்கு பஞ்சம் இல்லாத நிலை உருவானது. அப்போது நான் யோசித்தேன் " மாற்றுபடியும் நாம் ஏன் நம் கனவை நோக்கி செல்ல கூடாதுயென்று ".நான் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்தேன். என் பெற்றோரும் என் முடிவிற்கு உறுதுணையாக இருந்தார்கள்.

நல்ல ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து எனது கனவை நோக்கி முன்னேற ஆரம்பித்தேன்.அந்த ஆண்டு கடின உழைப்போடு படித்தேன். ஆனால் என்னால் அந்த ஆண்டு வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் நான் மனம் தளரவில்லை மீண்டும் முயற்சித்தேன். இந்த ஆண்டு நேர்முக தேர்வு வரை சென்று என் வெற்றியை தவரவிட்டேன். வீட்டிற்காக சேமித்து வைத்த பணமும் தீர்ந்துவிட்டது. அடுத்த மாதம் என் அம்மாவின் மருத்துவ செலவிற்கு பணம்மில்லாத நிலை ஏற்பட்டது. ஆனால் எனது பாசமிகு ஆக்கவோ தனது நகையை அடைமானம் வைத்து எனக்கு உதவினாள். நானும் வாரஇறுதியில் சில பயிற்சி மையங்களில் வேலை பார்த்து வந்தேன். இந்த ஆண்டு கண்டிப்பாக வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று குறிக்கோளுடன் படித்தேன். எனது கனவு நிறைவேறியது, அந்த ஆண்டு நான் முழுமையாக தேர்ச்சி பெற்று எனது ஐ.ஏ.எஸ் கனவை நிறைவு செய்தேன்.எனது தாய், தந்தை மற்றும் என் பாசமிகு அக்கா அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

எனது வாழ்க்கையில் நடத்த இந்த பயணம் எனக்கு பல ஊக்கத்தை கொடுத்தது. நாம் நம் கனவை மறக்காமல் என்றும் அதை நினைத்து ஓடினால் நிச்சயமாக ஒரு நாள் நாம் அதை அடையலாம்.

எழுதியவர் : ஆகாஷ் (19-Apr-20, 5:41 pm)
பார்வை : 152

மேலே