ஒரு குளத்தின் வரலாறு

ஒரு குளத்தின் வரலாறு
************************
(திண்டிவனம் ராஜாங்குளத்தின் வரலாறு )

வட்டமிடும்
பருந்துகளின் கூட்டம்!
சத்தமிடும்
பெரு அலைகளும் சமுத்திரமாய் இருந்தக் குளம்!
பொதி சுமந்த
கழுதைகளின் ஓய்வெடுத்த
சுவடுகளும் இல்லை!
யானை
குளியலிட்டு குளிர் காய்ந்த காலம் தொலைந்தது!
குளக்கரை மீது
போர்த்திய செடி கொடிகளின்
வண்ண பூக்களும்
அழகு ஓவியமாய் காட்சி தரும்!
வண்ணத்து பூச்சிகளின்
வருகையோடு தேனீயும் தேனெக்க
ரீங்காரச் சத்தம்!
பாறை மீது
ஆதவனைக் காண காத்திருந்த
ஆமைக் குஞ்சுகளும்
ஈரக் காற்றை
வாரி தெளித்த மரங்களும்!
அரசன் ஓய்வெடுத்த
குளம் நடுவே மண்டபம் அதன் மீது
பறவைகள் இளைப்பாறிட கண்டேனே!
நீல வானத்தை
போர்த்திக்கொண்ட
குளத்து நீர்!
நிலவு ஒளியில்
நீந்தி மகிழ்ந்த கெண்டை
குஞ்சுகள் வைரமாய்
மின்னிட!
மழை நீரை
மட்டுமே அள்ளி வந்த
வரத்து வாய்க்கால்!
ஆர்ப்பரிக்கும் அருவியாய்
பால் நுரையாய் பொங்கி குளத்தினுள்
ஊற்றும் அழகு!
மலம் கழிக்க
குளத்தினுள் நுழைந்தால் புயலென
விரட்டி அடித்து பாதுகாப்பாளர்கள்!
அன்று குடி நீராய்
பலர் இல்லத்துக் குடங்களை நிரப்பி
தாகம் தீர்த்தக்குளம்!
ஏழு கிணறு வரலாறு
சுரங்கப்பாதை முன்னோர்கள்
சொன்னது!
இரவு நேரத்தில்
கரைகளில் பேசும்
அலைகளின் ஓசை மீண்டும்
செவிகளில் கேட்க
ஆசை!
அன்புடன் ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (20-Apr-20, 7:28 am)
பார்வை : 62

மேலே