வாழ்த்து

உன்னிடம் சொல்வதற்கு
எத்தனையோ இருந்தும்
ஒரேஒரு சொல்லினைத்தேடி
மொழிகளுக்குள் புதைந்துகொண்டுவிட்டேன்..
உனக்கான ஒரு சொல்
புதையல்போல்
எங்கேயோ ஒளிந்துகொண்டுள்ளது..
உன்னிடம் உச்சரிக்கப்படும் போது
அது மிக அழகாக இருக்கவேண்டும் என்பதில்
ஆர்வமுடன் இருக்கிறேன்..
என்னால் மிகத்தீவிரமாக கொண்டாடப்படும் உனக்கு
பரிசளிக்கவேண்டிய தருணத்தில்
தருவதற்கு அந்த ஒரு சொல் மட்டுமே இருக்கும்..
மன்னித்துக்கொள்..
அதனைவிட சிறப்பானதொன்றை தரவும்
விருப்பம்தான்
ஆனாலும்
உனது கண்ணியத்தின் மீதுள்ள பெரும் காதலால்
ஒற்றைச்சொல்லுடன் நிறுத்திக்கொள்கிறேன்..
வாழ்த்துக்கள் அன்பே..

எழுதியவர் : Rafiq (21-Apr-20, 6:11 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : vaazthu
பார்வை : 70

மேலே