இரவும் எண்ணங்களும்

மாலை சூரியன் மங்கும்
இரவு மெல்ல பகலை விழுங்கும்

எங்கும் இருள் இருள் இருள்
அந்த நடுநிசியில்

நித்திரையை நெடுந்தொலைவில் நிறுத்திவிட்டு
என் விழிகள் மட்டும் விழித்திருக்கும்

எண்ணங்கள் என் விறல் பிடித்து
அங்கும் இங்கும் அழைத்துச்செல்லும்

இன்னும் திருந்தச்சொன்னால்

எண்ணங்கள் என் கழுத்தை பிடித்து
அங்கும் இங்கும் இழுத்துச்செல்லும்

இப்படியே என் இரவு கழியும்
மெல்ல மெல்ல காலை புணரும்

உலகிற்கு விடிந்தது
இன்னொரு அழகிய காலை

எனக்கோ முடிந்தது
இன்னொரு உறங்கா இரவு...

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (22-Apr-20, 11:21 pm)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : iravum ennangalum
பார்வை : 453

மேலே