சாதி மதம் நாடு

கருவறை என்னும் கடலில் இருக்கும் போது என்னை படகில் கரை சேர்த்தது என் தாய்..

என் மதம் அல்ல..
என் சாதி அல்ல..

நான் சிறுவயதில் தடுக்கி விழுந்தால் தாங்கி பிடிப்பது என் தாய்....

என் மதம்அல்ல ..
என் ஜாதி அல்ல..

நான் பசி என்று துடிக்கையில் என் பசியை தீர்த்தது என் தாய்...

என் மதம் அல்ல..
என் ஜாதி அல்ல..

நான் கஷ்டத்தில் அழுகையில் என்னை அரவனைத்தது என் தாய்...

என் மதம் அல்ல...
என் ஜாதி அல்ல...

மதங்களை பிரித்தார்கள்..
ஜாதிகளை பிரித்தார்கள்..
ஊர் ஊராக பிரித்தார்கள்..
மாவட்டம் மாவட்டமாக பிரித்தார்கள்...
மாநிலம் மாநிலமாக பிரித்தார்கள்..
நாடு நாடுகளாக பிரித்தார்கள்..

நாம் வாழும் பூமி ஒன்று ...
தண்ணீர் தரும் வானம் ஒன்று..
இந்த உலகம் ஒன்று...
நிலம் நீர் நெருப்பு காற்று வெளிச்சம் எல்லாம் ஒன்று...

இது எல்லாம் அனைவருக்கும் சமம் என்றால் மனிதர்கள் அனைவரும் சமமே ...

கேட்கும் கேள்வி ஒன்றே..?

நீ இந்தியாவில் பிறந்ததால் நீ இந்து..

இதுவே நீ பாகிஸ்தானில் பிறந்து இருந்தால் நீ முஸ்லிம்..

இதுவே நீ அமெரிக்காவில் பிறந்து இருந்தால் நீ கிறிஸ்துவம்..

நீ பிறக்கும் நாடே நீ என்ன சாதி மதம் நாடு என்று முடிவு செய்கிறது...

நீ அல்ல தோழா சிந்தித்து செயல் படு...!!!!!

பின்பு எதற்கு இது எல்லாம் ....

நான் பிறக்க காரணமாக இருந்த என் தாய் என் ஜாதி என் மதம்  என் நாடு என் கடவுள்....

எழுதியவர் : வினோத் குமார் (23-Apr-20, 11:59 am)
சேர்த்தது : வினோத் குமார்
Tanglish : saathi matham naadu
பார்வை : 239

மேலே