முத்தம்😘

முத்தம்😘

தென்றல் அது மலருக்கு தரும் முத்தம்
அலைகள் அது கரைக்கு தரும் முத்தம்
மேகம் அது நிலவுக்கு தரும் முத்தம்
மழை அது பூமிக்கு தரும் முத்தம்
கீதம் அது செவிக்கு தரும் முத்தம்
தாய் அவள் மழலைக்கு தரும் முத்தம்
பகல் அது இரவுக்கு தரும் முத்தம்
தலைவன் அவன் தலைவிக்கு தரும் முத்தம்
நாணல் அது ஆற்றுக்கு தரும் முத்தம்
அவளுக்கு அவன் தரும் முத்தம்
இதழ்கள் நான்கும் தரும் சத்தம்
"முத்தம்".
- பாலு.

எழுதியவர் : பாலு (25-Apr-20, 4:08 am)
சேர்த்தது : balu
பார்வை : 289

மேலே