துளிப்பா

💦 தேன் கூடு
வடிந்து சொட்டுகிறது
பனித்துளி

💦 ஏழைச்சிறுவன்
நிலாவைப் பற்றி படிக்கிறான்
நிலா வெளிச்சத்தில்

💦 பூப்பரித்தக் கை
வீசுகிறது
இரத்த வாடை

💦குளம்
நனையாமல் குளியல்
நிலா

💦 சூரியன் மறைகிறது
காட்டில் பிறக்கிறது
காட்டெருமை கன்று

💦 கோலம் இல்லை
வாசல் அழகாகயிருக்கிறது
அவள் நிற்கையில்


*கவிதை ரசிகன்*

💧💧💧💧💧💧💧💧💧💧💧

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Apr-20, 7:48 pm)
Tanglish : thulippaa
பார்வை : 54

மேலே