கோபுரத் தலையழகி

முற்றுப் பெறாத
கோபுரம் போல்
உன் தலையழகு
சொக்க வைக்கும்
முகம் அழகு

இன்னும் இரண்டடுக்கு
உயர்த்திவிடு
கலையழகு கோபுரம்
உன் தலையழகில்
மிளிரட்டும்.

சிலைகள் இல்லா
கோபுரம்
நீயே அழகுச்
சிலையானதால்!

எழுதியவர் : மலர் (27-Apr-20, 10:16 pm)
பார்வை : 66

மேலே