துளிப்பா

*சுதந்திர தின விழா*

*ஓர் ஓரமாக நின்றனர்*

*சுதந்திர தியாகிகள்*

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

*இன்று பலர்*

*வன்புணர்ச்சி கொள்கின்றனர்*

*கவிதையோடு*

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

*பூ பிஞ்சு காய் கனி*

*இருக்கிறது நிறைந்து*

*சாய்ந்த மரத்தில*

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

*கோழி குஞ்சுகள்*

*துரத்தி விரட்டுகிறது*

*தாய் கோழி*

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

*அம்மா அடிக்க வருகிறாள்*

*குழந்தை அடைக்களம்*

*அம்மாவிடம்*


கவிதை ரசிகன்

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

எழுதியவர் : கவிதை ரசிகன் (28-Apr-20, 7:22 pm)
பார்வை : 32

மேலே