161 ஆடவன் செயல் எல்லாம் ஆற்றுவது பெண் பழிப்பாம் – பரத்தமை 5

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வலதுகை துணைவனா மற்றோர் கைமனை
தலைவன்செய் தொழிலெலாந் தாரம் ஆற்றுதல்
தொலைவிலா வலக்கையின் தொழிலி டக்கர
நிலமிசைச் செய்தென நிந்தை மேவுமே. 5

– பரத்தமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”குடும்ப வாழ்வில் ஆடவர் வலது கையாகவும், மகளிர் இடது கையாகவும் ஆவர். கணவன் செய்யும் வேலை எல்லாம் மனைவி செய்ய எண்ணுவது வலது கையின் தொழிலாகிய உண்பது முதலிய செயல்களை இடது கை செய்ய எண்ணினால் இகழப்படுவது போல் இகழ்ச்சிக் குரியதாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

தலைவன் - கணவன். தாரம் - மனைவி.
ஆற்றுதல் - செய்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Apr-20, 6:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே