முதல் முத்தம்😍

தயக்கத்தோடு
உனதருகில் வந்து
தட்டி தடுமாறி
பதித்து விட்டேன்
உன் இதழ் மேல்
என் முதல் முத்தத்தினை!

முத்தம் முழுமையடையவில்லை
அங்கும் இங்குமாய்
சின்ன சின்ன பிழைகள்
எனக்கு இது முதல் முறையல்லவா..

பெண்ணே!
நான் செய்த பிழையினை
திருத்திக் கொள்ள...
உன் இதழ் மேல்
என் இதழின் ஈரம் ஒட்டிக் கொள்ள..
எனக்கு மீண்டும்
ஒரு முறை வாய்ப்பு தருவாயா?

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:42 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 877

மேலே