ராமசாமியின் ராசாத்தி

ராமசாமி ஓடி விறுவிறுத்து வந்தான் , அப்ப தான் புரிந்தது அவன் போலீஸ் வேலைக்கு சேந்தப்புறம் இதுவரைக்கும் ஓடவேயில்லைனு . கல்லூரியில் படிக்கும் போது அவன் ஒரு பெரிய அதிகார பதவியில் வருவான் என்பது எல்லாருக்குமே தெரியும்.

வேர்த்து விறுவிறுத்த இந்த நேரத்தில பாஸ்கர் சொன்ன வார்த்தைகள் தான் ஜபாகம் வந்தது

மச்சி, நீ எப்படியும் ஒரு IPS வாங்கிருவே தெரியும், உன்னுடைய பிஸிக்கல் பிட்னெஸ்க்கும் நீ பண்ணுற ப்ராக்ட்டீஸுக்கும் கண்டிப்பா நீ IPS தாண்டா , மவனே அப்ப மட்டும் செம பிகு பண்ணின உன் லவ் மேட்டர எல்லாம் வாட்சப்பில போட்டு ஊருக்கெல்லாம் சொல்லிருவேன்.

அவன் அப்பாவும் ஒரு போலீஸ் தான் , அவனது அம்மா அவன் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது மாரடைப்பிற்கு சொந்தமானார் , அது அவனுக்கு ஒரு பேரிழப்பாக இருந்தாலும், அப்பாவின் நட்பு ஒரு பெரிய துணையாக இருந்தது. அவனது அக்காவுக்கு திருமணம் ஆகி பக்கத்துக்கு ஊரில் தான் இருக்கிறாள் , மச்சான் கிராமத்து நிர்வாக அதிகாரி . அதிகமாக சொல்ல ஒண்ணும் இல்லைனாலும் , அக்கா வீட்லயிருந்து அதிமாக தொந்தரவோ பிரச்சனையோ இருந்ததில்லை.

ராமசாமிக்கும் அவன் அப்பாவுக்கும் ஒரே கனவுதான், எப்படியாவது ராமசாமி ஒரு IPS ஆகவேண்டும்.
ராமசாமியன் அப்பா கையூட்டு வாங்காத ஒரு நேர்மையான காவல் அலுவலர் ( Police Constable ).
அம்மா போனபிறகு அப்பா அதிகமாக இரவு பணியை விரும்பினார் , அவர் எப்போ தூங்குவார் எப்போ வேலைக்கு போவாருனு ராமசாமி கவனித்ததே இல்லை.

அவன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது அவன் அப்பாவும் காலமானார் , படிப்பை தொடர முடியாமல் காவலர் ஆனான் ராமசாமி


அப்படியே பிரசவ வார்டு நாற்காலியில் அமர்த்தவனை nurse கூப்பிட்டாங்க , சார் நீங்க தான் ராமசாமி யா?

ஆமாம் மா

உங்க wife தான் , மீனாட்சி யா ?

ஆமாம் மா

டாக்டர் பாத்திட்டு இருகாங்க சார் , ஏதாவது வேணும்னா நான் கேக்குறேன் சார் .

நர்ஸ் , நார்மல் டெலிவெரி தானே?

எப்பவுமே நார்மல் டெலிவரி தான் டாக்டர் ட்ரை பண்ணுவாங்க , ஒருவேளை முடியலைன்னா தான் cesarean பண்ணுவாங்க

ராமசாமி நம்பிக்கை இல்லாமல் நர்ஸை பார்த்தான் ,

நர்ஸ் சிறிதாக புன்னகையோடு பேசினாங்க - சார் உங்ககிட்ட எல்லாம் அப்பிடி பண்ணமாட்டாங்க சார். யூனிபோர்ம்ல இருந்தா மேனேஜ்மெண்டுக்கு கொஞ்சம் பயம் தான் . சிரித்துக்கொண்டே நகரத்தார்கள் நர்ஸ் கமலா ! போய் கேன்டீன்ல காபி டிபன் சாப்பிட்டு வாங்க , ஏதாவது தேவைன்னா நான் கூப்பிடுறேன் சார் . உங்க போன் நம்பர் குடுங்க , கமலா நர்ஸ் போன் நம்பரை வாங்கிய வேகத்தில் ICU விற்குள் நடந்து போனார் .

ராமசாமிக்கு ஒரு திருப்த்தி வந்த மாதிரியே இல்ல, சரி ஒரு காபி சாப்பிடுவோம்னு ஆஸ்பத்திரியின் எதிர்புறமாக இருந்த டீ கடைக்கு போனான்.

அவன் டீ கடையை நெருங்கும்போதே அங்கிருந்தவர்கள் சிறிது உசாராக இருந்த மாதிரி ஒரு பீலிங்,
பைக்கில் இருந்த அந்த ஆள் , தனது பேச்சு துணையோடு பேசினது ஒருவேளை ராமசாமியை தானோ?

எப்பா இங்கையும் விட்டுவைக்கலியா? ...ஒரு கேவலமான சிரிப்புடன் ....

இருந்த டென்ஷன்ல அது பெரிய விஷயமா ராமசாமிக்கு தெரியல்ல...அவன் வருத்தம் எல்லாம் எப்படியாவது மீனாட்சியும் குழந்தையும் வீட்டுக்கு சீக்கிரம் வரணும்ங்கிறது தான் .

எப்போம் போல தோரணையா , ஏம்பா ....ஒரு ஸ்டராங் டீ , ஏதோ யோசித்தவன் போல...அப்படியே ஒரு கிங்ஸ் பிட்டர் ...

ஆர்டர் கம்ப்ளீட் செய்தவன் , ஒரு ஓரமாக புகையிழுத்துக்கொண்டிருந்தான் ! பக்கத்தில் டீ டம்பளர் இருந்தது...ஏதோ யோசித்துக்கொண்டிருந்தான் ....தீடிரென திரும்பினான் அந்த குரலை கேட்டவுடன் .

என்ன சார் , உங்களை அங்க தேடினா நீங்க இங்க இருக்கீங்க ? அதே நர்ஸின் குரல் ....

டமால்னு , சிகரெட்டை கீழே போட்டான் ராமசாமி ...நீங்க போன் பண்ணியிருக்கிலாமே? ன்னு கேட்டவனுக்கு தீடீர்னு மண்டையில லைட் எரிந்தது.....இந்த அம்மா எதுக்கு ரோடு தாண்டி இங்க வருது ...

நர்சம்மா ..ஏதாவது சீரியஸ்ஸா ?

இல்ல சார், பயப்படாதீங்க ...ஆமா நீங்க உள்ள இருக்கிற கேன்டீன்ல இருப்பீங்கன்னு நெனச்சேன் .

குழந்தை பிறந்த அப்புறம் தம் அடிக்க கூடாதுன்னு wife சொல்லிருக்கா , அதான் டக்கினு ஒரு தம் அடிக்கிலாம்னு ...இழுத்தான் ராமசாமி. என்ன விஷயம் சொல்லுங்க....

ஒன்னும் இல்ல சார் , டூட்டி டைம் முடிச்சுது , ப்ரியா நர்ஸ் தான் டூட்டி , நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன் .

சிறிது பயந்தவன் போல் , அவங்க ஒகே-வா ? கமலா நர்ஸ் அதே புன்னகையோடு சிரித்துக்கொண்டே சிறுது அங்கும் இங்கும் பார்த்தார்கள்.

கொஞ்சம் இப்படி வாங்க ... .என்று கொஞ்சம் கடையிலிருந்து தள்ளி கூட்டிட்டுபோனார்கள் ....மொத்தம் 3 நர்ஸ், 2 டாக்டர் அப்புறம் ரண்டு மூணு அசிட்டன்ஸ் ...சிலர் எதிர்பாப்பாங்க ..உங்களுக்குக்கு தெரியாதது இல்ல ...

மனசுக்குள் ராமசாமிக்கு....எனக்கேவா என்று தோன்றினாலும் , பெரிய அதிர்ச்சியாக இல்ல....ஏம்மா இதை முதல்லே சொல்ல வேண்டியதுதானே ? அவன் பேச்சின் தோரணை மாறியது இப்போ ....

ராமசாமி கியர் சேஞ்சு பண்ணிட்டார் தெனாவட்டாக......ஒரு 2000 ரூபாய் தாழை நர்ஸின் கையில் கொடுத்தான் .

சார் என்ன விளையாடுறீங்களா , நார்மல் டெலிவெரினா 30,000 - 40,000 ஆகும் , கரெக்டான அமவுண்ட்ட அப்புறம் சொல்றேன் , கடைக்காரர் கிட்ட இப்ப ஒரு 25,000 குடுத்திட்டு போங்க...இந்த முறை நர்ஸிடம் அந்த சிரிப்பு இல்லை ...

அப்படி இப்படியாக ஒரு லட்ச்சம் ஆச்சு...அப்பறம் தான் குழந்தையை பாக்க விட்டாங்க....

மீனாட்சி , ரொம்ப tired ஆ இருந்தா , எப்படியம்மா இருக்க....

பாப்பாவை பாத்தீங்களா , வலியும் , சிரமமும், பணமும் எல்லாவுமே அந்த சின்ன குழந்தைக்கு முன்னால் டமால் ஆனது....அவ்வளவு அழகாக இருந்தாள் ...மன்னிக்கவும் தெய்வீகமா இருந்தாள் . (யாராவது தெய்வீகமான என்னானு கேட்டா இனிமே இத சொல்லுங்க )

ராமசாமி அந்த குழந்தையை பார்த்துக்கொண்டே ....மீனாச்சிகிட்ட சொன்னான்....

மீனாட்சி ...இனிமே லைஃப்ல தப்பே செய்ய கூடாதுனு தோணுதுடி ....

மீனாட்சியை பார்த்தான்.....அவள் அவளுக்கும் தெரியாமல் அழுது கொண்டிருந்தாள் ....

மீனாட்சி சிரித்த அழுகையுடன் கேட்டாள் ...எங்க ?

என்னமா?

கடவுள் தன் அன்பை இப்படித்தான் காட்டுவார் என்னும் ஒரு உணர்வு ..... அப்பொழுது மீனாட்சிக்கு முத்தம் மட்டுமே கொடுக்க முடித்து ...இருவர் கண்ணிலும் அழுகை ...ஆனால் மனதில் சந்தோசத்தின் உச்சம், ஒரு கர்வம்...ஒரு பெருமை ....எல்லா நல்ல வார்த்தைகளும் இப்ப தான் குடமுழுக்கு அடையும் தருணம் .மனத்தின் ஒரு ஓரத்தில் கூட கெட்ட எண்ணமோ , பகையோ , பொறாமையோ எந்த ஒரு தீய எண்ணமோ இல்ல . ஒரு குழந்தையின் பிறப்பு .... அதிசயம்தான்


ராமசாமி சொன்னான் : மீனாட்சி ...இவள "ராசாத்தி" னு கூப்பிடணும்னு தோணுது, நீ என்ன பேரு வேணும்னாலும் வச்சுக்கோ ....

அப்பாடா ...கதைக்கு பேரு கிடைச்சாச்சு " ராமசாமியின் ராசாத்தி ".....

மீனாட்சி என மெதுவாக கூப்பிட்ட ராமசாமி ....அடியே ராசாத்தி வந்தது மனசை "oli change" பண்ணினமாதிரி இருக்கு ....சொல்லிட்டே அப்படியே சாய்ந்து உற்காந்தான் ...

அப்ப தான் போன் வந்தது....Constable மகேஷ் இடமிருந்து.....சொல்லுங்க மகேஷ். நான் ஹோச்பிடல இருக்கேன் , பொண்ணு பொறந்திருக்கா...

மறு முனையில் , மகேஷ் அதை கேட்டதாகவே இல்ல, மிக மெல்லிய குரலில் மகேஷ் கேட்டார் ....ஆமா ராமசாமி அந்த பில்டிங் காண்ட்ராக்டர் கிட்ட எவ்வளவு சொல்லி இருந்தீங்க?

ஒரு நிமிடம் கூட யோசிக்காத ராமசாமி மெதுவாக சொன்னான் ....1 லட்சம் சார் ...

மகேஷ் : சரி, சரி நான் பாத்துக்கிறேன் இவன் பெரிய ரகளை பண்ணீட்டு இருக்கான் .

ராமசாமி : மகேஷ் சார் , நான் ஒரு வாரம் வரமாட்டேன் , பாத்து வாங்கிடுங்க ....

மகேஷ்: ஏன் சார் ...என்ன ஆச்சு ...

ராமசாமி: இப்ப தான் சார் சொன்னேன் , wife க்கு குழந்தை பிறந்திருக்கு ...

மகேஷ் : சாரி சார் , கேக்கவே இல்ல ...வாழ்த்துக்கள் சார் ...பத்துங்கோங்க நான் அப்புறம் பேசுறேன்.

ராமசாமி: சரி சார் , ஹோச்பிடல நெறைய செலவு சார், புடுங்கீட்டானுக ....

மறு முனையில் போனே வைக்கும் சத்தம் மட்டுமே கேட்டது ...

மீனாட்சி கேட்டாள் , என்னங்க எவ்வளவு செலவாச்சு ?

ஒரு லட்சம் ....ஆச்சு....சிறுது கனத்த குரலில் சொன்னான்.

எதுக்குங்க அவ்வளவு ...மீனாட்சி பெரிய ஆச்சரியசத்தோடு கேட்டாள்

எல்லாம் அப்படித்தான் மீனாட்சி , நல்ல சர்வீஸ் வேணும்னா பணம் கொடுத்தான் ஆகணும் .

இரண்டு நாளுக்கப்புறம் வீட்டுக்கு போனார்கள் , வழக்கை வெகு வேகமாக போய் கொண்டிருந்தது .ராமசாமி இப்போ SI அதாவது உதவி ஆய்வாளர் கோவை மாவட்டம் , ராமநாதபுரம் ஏரியா . நல்ல காசு வர்ற ஏரியா. அவன் ராசாத்தி இப்போ 4ஆம் வகுப்பு நடிக்கிறாள் , அவளுக்கு ஆர்த்தி தான் அதிகாரபூர்வமான பெயர் . மிகவும் சுட்டி , நல்லா படிப்பா , அப்பாவுக்கு அவள் ரொம்ப செல்லம்.

மீனாட்சிக்கு பிடிக்காத ஒண்ணு , 4 வது படிக்கிற பொண்ணுக்கு i-phone வாங்கிக்கொடுத்து தான் , ராமசாமியிடம் பல முறை சண்டை போட்டாள் , ஆனால் அவன் அதை பெரிசா எடுத்துக்கவே இல்ல .

அப்பாவை தாடி வைக்க சொல்லி கேட்டுட்டே இருப்ப்பா , அவளுக்கு அப்பாவோட லைட்டான தொப்பைல படுத்திட்டு அந்த தடியை வருடி விடுறது ரொம்ப புடிக்கும் , அவளுக்கு வேண்டியே சில நாட்கள் அவன் தாடி விடுவான்.

இது நாலாவது தடவை ராசாத்தி கேப்பது....ஆனால் இந்த முறை அவ ரொம்ப அழுகிற மாதிரி கேட்டா , அப்பா , நீ லஞ்சம் வாங்குவியா?

மீனாட்சியும் ராமசாமியும் , ஒருவரை ஒருவர் எப்படி பாத்திருப்பாங்கனு உங்களுக்கே தெரியும்

நடு ரோட்ல எல்லார் முன்னாலையும் ட்ரெஸ்ஸே இல்லாம நிக்கிற ஒரு உணர்வு. இது ஒனக்கு தேவையான்னு அவனே மனதுக்குள் கேட்டுக்கிட்டான்

ராசாத்தி விடுறதா இல்ல , அப்பா சொல்லுப்பா

இல்லடி செல்லம்....அப்பா வாங்க மாட்டேன் ....

என் பிரண்ட் மேகலா சொல்றறா , அவங்க வீட்டு பார்ட்டில , நம்ம வீட்டுக்கு வந்தப்புறம் அவங்க எல்லாரும் சேந்து பேசினாங்களாம் , நீங்க மேகலா அப்பா கிட்ட ஒரு தடவை நிறைய காசு வாங்கினீங்களாமாம் ? அது எதுக்கு....?

மீனாட்சி : ஏண்டி ஹோம் ஒர்க் பண்ணுனியா ....

ராசாத்தி : ஏம்மா , நீ தானே நான் எல்லா ஹோம் ஒர்க்ம் முடிச்சாச்சு ...இது play டைம்னு சொன்னே

மீனாட்சி : அப்ப வெளிய போய் விளையாடு , இல்லாட்டி போன் ல கேம் விளையாடு

ராசாத்தி: போ அம்மா , எனக்கு அப்பா கிட்ட தான் பேசணும் ...அப்பாவிடம் திரும்பி...அப்பா நீ சொல்லு காசு வாங்கினியா ?

ராமசாமி : இல்லம்மா , அவங்க அப்பாவுக்கு ஒரு problem , அப்பா அதை சரி பண்ணுறதுக்கு காசு தேவை பட்டுது அதான் ...நீ போ போய் விளையாடு.

ராசாத்தி ஏதோ பதில் கிடத்தைப்போல் அவள் அறைக்கு ஓடினாள் ......போனை எடுத்து எதையோ பார்த்து கொண்டிருந்தாள்

மீனாட்சி: ஏங்க , நீங்க அதை பெரிசா எடுக்காதீங்க , அவ சின்ன பொண்ணு

ராமசாமி: ஒனக்கு ஜாபகம் இருக்கா மீனாட்சி , ராசாத்தி பொறந்தப்ப நம்ம என்ன பேசினோம்னு? நான் சிகரெட் குடிக்கிறதை நிறுத்திட்டேன் அனால் என்னால நிம்மதியா தூங்க முடியில்லடி இவ கேக்கிற கேள்வி ....சுகமில்லாத முகத்துடன் வெளியே போனான்

அப்பாவின் பைக் சத்தம் கேட்டு ராசாத்தி ஓடி வந்தாள் ....ஆனால் ராமசாமி அதற்குள் போய்விட்டான்

ராசாத்தி: அம்மா ஏன் ம்மா அப்பா என்னை கூப்பிட்டு போகல , என்னை கடைக்கு கூப்பிட்டு போலாம்னு சொன்னாரு

மீனாட்சி அவளால் பொறுக்க முடியாத கோபத்தால் ராசாத்தி-யை அடித்துவிட்டாள்,

ஆனால் ....
ராசாத்தி அழுகவே இல்ல ...

ஏம்மா அடிச்ச ? கனத்த குரலுடன் கேட்டாள் ....

மீனாட்சிக்கு அழுகையே வந்தமாதிரி ஒரு பீலிங் ....சாரிடி என்றாள் ....தன் 10 வயது குழந்தை முகத்தை பாக்க முடியாத ஒரு அவமானம் . சட்டென்னு ...அடுக்களை பக்கம் போனாள் .ஏதோ பயங்கரமாக வேலை செய்வது போல் பாவித்துக்கொண்டுருந்தாள்.

அவள் சிந்தனை எல்லாமே ....இது தேவையா அப்படிங்கிற ஒரு பீலிங் ....

அம்மா அப்பா என்கிட்ட பொய் சொல்றாங்க ....ராசாத்தியின் சத்தம் கேட்டு திருப்பினாள் மீனாட்சி .

என்னடி பொய் சொன்னாங்க ? போய் வேலைய பாரு ...அதட்டினாள் மீனாட்சி

அம்மா இந்த விடீயோவை பாரு, ஒரு போலீஸ்காரர் லஞ்சம் வாங்கினதை வீடியோ எடுத்து எல்லாரும் அசிங்கமா சிரிக்கிறாங்க ...மேகலா சொல்ற நம்ம அப்பாவும் இப்டித்தான்னு ! யூடூபில் உள்ள ஒரு வீடியோவை காட்டினாள் ராசாத்தி !

மீனாட்சி வீடியோ பார்ப்பதுபோல் இருந்தாலும் , அவ மனசுல செருப்பில அடிச்ச மாதிரி ஒரு பீலிங் . வீடியோ பார்க்கிற மாதிரி பாவித்தாள் .

அந்த ஆளுக்கு ஏதாவது கஷ்டம் இருந்திருக்கும் , அதான் அவர் அப்படி ....என்று மீனாட்சி சொல்லி முடிக்க கூட ராசாத்தி விடல

அம்மா எனக்கு எல்லாம் தெரியம்மா ....நான் நெறய ரீசெர்ச் பண்ணிட்டேன் ...மீனாட்சி திரும்பி நின்னிட்டு அழுதாள் ராசாதிக்கு தெரியாம .

அம்மா , நீ தானே சொன்ன , நமக்கு கஷ்டம் வந்தா சாமிகிட்ட சொன்னா அவர் பாத்துப்பார்ன்னு ?
நானும் , நீயும் ,அப்பாவும் சேந்து சாமிகிட்ட கேக்கிலாம்மா ....அப்பா கிட்ட லஞ்சம் வாங்க சொல்லத்தம்மா .

மீனாட்சிலால் இதுக்குமேல தாங்க முடியல்ல ....ராசத்தியை கட்டி அணைத்து ஓ ...ன்னு அழுதாள் ...

ராசாத்தி அப்ப கூட , வெகுளியாக சொன்னாள் , அழாதம்மா சாமி கிட்ட சொல்லிடலாம் அவர் பாத்துப்பார் ....

இரவு, 10 மணிக்கு தான் ராமசாமி வந்தான் . ராசாத்தி தூங்கிவிட்டாள் ....

படுக்கையில், மீனாட்சி சொன்னாள் ....

ஏங்க , இனிமே காசு வாங்காதீங்க ....அந்த காசை நான் கையால தொடமாட்டேன் ....போதுங்க

நானும் அதாண்டி நினைக்கிறேன் , ஆனா எப்பிடி பண்ணுறதுதான் தெரியல்ல ....மீனாட்சியை பார்த்தான் ராமசாமி ....

சாமி கிட்ட சொல்லிடலாம்...சாமி பத்துப்பார் ....கத்திகொண்டே முத்தமிட்டாள் ராசாத்தி ....


இப்படி...ஒரு ராசாத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் இருந்தால் ....லஞ்சம் வரலாறு ஆகிவிடுமா?

எழுதியவர் : புஷ்பன் (4-May-20, 7:38 pm)
சேர்த்தது : புஷ்பன்
பார்வை : 124

மேலே