செவி
ஆறறிவில் ஓரறிவாம் உடற்கூறின் கட்டமைப்பில்
அறஞ்செய்தே உரம்பெருக்கி மடல்போலே மலர்ந்திருக்க
பிறவியில் குறையன்றி ஒலிகளை உணர்ந்திட்டால்
உறவாடும் உன்னதச் செவி.