மருத்துவ வெண்பா – தேங்காய்ப் பிண்ணாக்கு - பாடல் 61
நேரிசை வெண்பா
சொறிசிரங்கு புண்ணுமாந் தோலாக் கரப்பான்
மறுவாகு மேனியெல்லா மாதே – சிறுக
வயிற்றிற் புழுவினங்கண் மாறா(து) உதிக்குஞ்
சுயத்தேங்காய்ப் பிண்ணாக்காற் சொல். 61
- குண பாடம்
குணம்:
தேங்காய்ப் பிண்ணாக்கினால் நமைச்சல், சிரங்கு, விரணம், நீங்காத கரப்பான், மறு, மலாசயக் கிருமிகள் முதலியன உண்டாகும்.
உபயோகிக்கும் முறை: தேங்காய்க் கொப்பரையைச் செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் பிரித்தபின் தள்ளப்பட்ட பிண்ணாக்குடன் சிறிது வெல்லம் சேர்த்து உண்பதுண்டு.
இதனால் சொறி, சிரங்கு, நமைச்சல், சரீரமெங்கும் மறு, வயிற்றிற் கிருமிகள் முதலிய உண்டாகும். ஆகையால், இதனை அசுத்த உணவாகக் கொள்வர்.