காலத்தால் அழியாத நட்பு 🤝

காலத்தால் அழியாத நட்பு . 🤝

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த இந்த பறவைகள்
கல்லூரி என்ற வேடந்தாங்கலில் நட்பு கொண்டனர்.
ஆண், பெண் நட்பு
அவ்வளவு எளிதில்
சாத்தியமில்லை
பல ஏச்சுக்கும், பேச்சுக்கும் மத்தியில்
நட்பை உறுதியாக பலபடுத்தினார்கள்.
இவர்களுக்கிடையே காதல் தான்
என்ற கற்பனையாளர்களுக்கு
இவர்கள் செவி சாய்க்கவில்லை.
இயற்கையோடு கைகோர்த்து இவர்கள்
இயல்பாக பழகினார்கள்.
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பாழ்.
பழைய பஞ்சாங்களுக்கு பதில் கூறாமல் நட்பை உயிர் என கருதினர்.
என் வாழ்வின் விடியல் நீ!
அவன் எழுதினான்.
உன்னால் என் வாழ்வின் வசந்தகாலம் ஆரம்பம்!
அவள் எழுதினாள்.
அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது.
அதில் எள் முனை அளவும் மாற்று பாலின கவர்ச்சி ஏற்படவில்லை.
மாறாக அவர்களுடைய நட்பு பாலம் உறுதியானது.
மலை என வளர தொடங்கியது.
அவனை ஒரு நாளும் பார்க்காமல் அவளால் இருக்க இயலவில்லை.
அவளை நினைத்தே அவன் நிமிடங்கள் ஓடியது.
கடல் அலைகளில் ஒன்றாக நின்றார்கள்.
ஆலமரத்தடியில் பல மணி நேரம் பேசினார்கள்.
மலை உச்சி சென்று நட்பு கொடி நட்டு ஆரவாரம் செய்தார்கள்.
ஆதவரவற்றவர்களுக்கு உதவி கரம் நீட்டினார்கள்.
பெண்ணியம் பேசி,
பாரதியை புகழ்ந்து,
பெரியாரை போற்றினார்கள்.
அம்பேத்கரை ஆதரித்து
சாதியை சாடினார்கள்.
மதத்தை விட மணிதமே மேல் என்று முழக்கம் இட்டார்கள்.
கல்லூரி பயணத்தை வெற்றியுடன் முடித்தார்கள்.
மேல் படிப்பை சேர்ந்தே படித்தார்கள்.
அதிலும் வெற்றி கொடி நாட்டி தனி தொழில் கூட்டாக ஆரம்பித்தார்கள்.
கடுமையாக உழைத்து நிறுவனத்தை மாநிலம் முழுவதும் தெரியும்படி சாதித்தார்கள்.
அவரவர் வீட்டில் கல்யாண பேச்சு எடுக்க
இருவரும் வாழ்க்கையில் திருமணம் வேண்டாம் என முடிவு எடுத்தனர்.
திருமணம் தங்கள் நட்பை பிரித்துவிடும்.
உன்னையும், என்னையும் பிரிக்க ஆண்டாவனாலும் முடியாது.
நம் இருவரை பிரிக்க ஒரே ஒருவரால் மட்டுமே முடியும்.
அவர் பெயர் மரணம்.
பெயர், பணம், புகழ் எல்லாம் அவர்களை ஆக்ரமிக்க
ஆரவாரம் இல்லாமல் அவர்கள் நட்பை மிக சிறப்பாக தொடந்தார்கள்.
ஒரு முறை உலக முழுவதும் சேர்ந்து பயணம் செய்த அவர்கள் நட்பை கொண்டாடி தீர்த்தார்கள்.
போதும் என்ற மணமே பொன் செய்யும் மனம்.
காதோரம் நிரைக்க
வயதை உணர்ந்த அவர்கள் நிறுவனத்தை
அடுத்த தலைமுறையிடம் சமர்பித்து
இயற்கையாக வாழ முற்பட்டார்கள்.
ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதற்கான வளர்ச்சிகாக, மீதும் உள்ள வாழ்க்கையை கழிக்கு முடிவெடுத்தார்கள்.
கிராமத்திலேயே சின்னதாக குடிசை வீடு கட்டி மிக சாதாரண வாழ்க்கை வாழ தொடங்கினார்கள்.
மக்களோடு மக்களாக பழகி அவர்களிடம் அன்னியோன்னமாக பழகினார்கள்.
இயந்திர வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்த அவர்கள் இயற்கையான வாழ்க்கையை ரசித்து வாழ பழகி விட்டார்கள்.
பசு மாட்டு பால் குடித்த அவர்கள்
பழங்கஞ்சி பச்சை மிளகாய் காலை ஆகாரமாக பழகிவிட்டனர்.
கம்பங்கூழும்,
கேப்பங்களியும் அவர்களை மிகவும் கவர்ந்தது.
வாழ்க்கையின் தாத்பரியம் உணர்த்த அவர்கள் கிராமத்து எளிமையை விரும்பி அனுபவித்தார்கள்.
மூத்த குடி வயதை தோட்ட அவர்கள்
வயது ஒரு என்னிக்கையே
வாழ்க்கை ஒரு வரம்
அதை ஒரு தவமாக கருதி பயணிப்போம் என்று சூளுரைத்தனர்.
இரவு எப்போதுமே நோய்க்கு நண்பன்.
அவன் தீடிர் நெஞ்சு வலி
அவளை மிகவும் பதட்ட படுத்தியது.
கிராமமே ஒன்று கூடிவிட்டது.
நகரத்துக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பத்து நாட்கள் பிறகு அவன் சகஜ நிலைமை திரும்பினான்.
அவள் அவனை கட்டபிடித்து முத்தம் கொடுத்து
" டேய் என்னை விட்டு நீ போய்டுவியா, போக விட மாட்டேன், என் உயிரை கொடுத்து உன்னை காப்பேன்"
உணர்ச்சி வசப்பட்டு அழுதாள்.
மீண்டும் கிராம வாழ்க்கை அவர்களை அரவனைத்தது.
இரண்டு வருடம் எப்படி போனது.
காலம் மிக வேகமாக போவதாக இருவரும் நினைத்தனர்.
அன்று நிலவின் வெளிச்சம் அவர்களை உற்சாக படுத்த
கயிற்று கட்டிலில்
வெட்ட வெளியில்
நிலா சோறு
ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டனர்.
மிக ஆனந்தமாக காணபட்ட அவர்கள் நட்பை பண்டிகையாக கொண்டாடினர்.
இரவு இருவரும் நன்கு உறங்கிவிட்டனர்.
காலையில் எழுந்த அவன், அவளை எழுப்பினான்.
அவள் எழவில்லை.
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
மீண்டும், மீண்டும் அவளை எழுப்பினான்.
அவள் மரணம் அவனிடம் இருந்து முதல் முறையாக பிரித்தது.
சிலையாக அமர்ந்து விட்டான்.
எல்லாம் முடிந்தது.
அவன் யாரிடமும் பேச விருப்ப படவில்லை.
அவனுக்கும், அவளுக்கும் நட்பு ஆரம்பித்த கல்லூரிக்கு சென்றான்.
அந்த உயர்ந்த மரத்தடியில் ஆரம்பான அவர்களின் நட்பை மெல்ல அசை போட்டான்.
தன் தோலில் மாட்டியிருத்த ஜோல்ணா பையில் இருந்து அவளுடைய பிரேம் போட்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்து தன் விரல்களால் தடவினான்.
அப்படியே அந்த மரத்தடியில் உட்கார்ந்து சாய்தான்.
அவள் இல்லாத இந்த உலகில் அவனால் எத்தனை நாளுக்கு சுவாசிக்க முடியும்.
அவன் சுவாசம் அவள் என கருதியபிறகு.
நட்பு, எதையும் எதிர்பாராதது.
நட்பு, உண்மையானது.
நட்பு, மகோன்னதனமானது.
நட்பு, உலகில் உண்ணதுமானது.
நட்பு, தாயை ஒரு படி உயர்ந்தது.
இந்த இருவருடைய உயர்ந்த உறவு காலத்தால் அழிக்க முடியாது நட்பு .

- பாலு.

எழுதியவர் : பாலு (11-May-20, 10:16 pm)
சேர்த்தது : balu
பார்வை : 605

மேலே