ஒரு கிருமியின் கோர தாண்டவம்
ஒரு கிருமியின் கோர தாண்டவம்.
கண்ணுக்கு தெரியாத
ஒரு கிருமி
உலகத்தையே ஆட்டி படைக்குது.
பணக்காரன்,ஏழை என்று பாராமல்
சாதி, மதம் பாராமல்,
சம தர்ம பாணியில்
எல்லோரையும் அச்சிருத்துகிறது.
அடி மடியில் கை வைக்குது.
கோர தாண்டவம் ஆடுது.
புரியாத புதிராய்
விடை தெரியாத விடுகதையாய்
பதில் இல்லாத கேள்வியாய்
உலகம் முழுவதும் பயணிக்குது.
இதுவரை வந்த வியாதிகளுக்கு ஒரு ஆரம்பம் உண்டு
ஒரு முடிவு உண்டு
மருந்து உண்டு
ஆனால் அதிசயம்
இது எங்கே எப்படி தோன்றியது
எதனால் வந்தது
இதன் நதி மூலம் என்ன
இதன் வீரியம் என்ன
இதை அழிக்க என்ன மருந்து
எதுவும் இதுவரை துல்லியமாக புலப்படவில்லை
இது பற்றி காதில் விழும் செய்தி யாவும்
நிச்சயமானதாக இல்லை.
கலியுகம் கானும் மிக மர்மமான திகில் படம்
எவ்வளவு தான் மூளையை கசக்கி பிழிந்தாலும்
விஞ்ஞானிகளே மூக்கில் மேல் வரல் வைக்கும் அளவுக்கு
ஆட்டம் போடும் ஆட்கொல்லி.
காலதேவன் ஜனத்தொகையை கட்டுப்படுத்த அனுப்பி வைத்த பதிய அனு ஆயுதமா
இல்லை உண்மையிலேயே சீனாக்காரன் செய்த பெரும் நாச வேலையா
அப்படி அவன் செய்துயிருந்தால் அவன் மக்களையே அவன் அழிப்பானா
கேள்வி எழதானே செய்கிறது.
சீனா தான் காரணம் என்று சொல்லும் அமெரிக்கா பின் ஏன்
அவனிடம் தான் இதற்கான தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்குது.
முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
இது நோய் தானா.
இல்லை உலகம் ஒரே குடையில் வர வேண்டும் என்று சில வல்லரசுகள் செய்த மாபெரும் சூழ்ச்சியா.
இல்லை அதீத மருத்துவ ஆராய்ச்சியின் விபரீத விளையாட்டின் விளைவா?
இது இயற்கையாக இருந்தால் இது இயற்கையாகவே இயற்கை ஏய்துவிடும்.
செயற்கையாக இருந்தால்
மூன்றாம் உலக போர் வர வாய்ப்பு உண்டா?...
- பாலு.