ஆமாம் யார் அவள்

ஆமாம் யார்? அவள்
அமுதக்கடலில் தவளும் கன்னியா
இல்லை பிரம்மனின் படைப்பா....
கார்மேக கூந்தலில்
கவிப்பாடும் விழியா இல்லை
மல்லிகைச்சரம் மடலா!

அவள் புன்னகை மலரும்
முத்துப்பற்களா இல்லை
மின்னும் மாணிக்ககற்களா!
சங்கு கழுத்தில் வைரமணி .துகளா
இவளின் இடையில் சதிராடும்
தங்க மணி குழலா!!
வட்டநிலவும் தோற்கும்
முக அழகா!
ஏழுநிற வீண்மீன்கள் வியக்கும்
மெய் அழகா!
சொர்க்கத்தில் காணக்கிடைக்காத
பொக்கிஷம் இவளா!!!
அந்த சொர்க்கத்திற்கே
வியப்பூட்டும் விக்கிரகம் மகளா!

அவள் கனவில் வந்த தேவதையா
அல்ல
இவள் கண்முன்
வந்த பூமகளா!!

அவள் எனக்கென தந்த
அன்பை ஆராதிப்பேன்
புன்னகை கமல

கவிஞர் காளீஸ்வரன்

எழுதியவர் : கவிஞர் காளீஸ்வரன் (22-May-20, 1:05 pm)
பார்வை : 139

மேலே