ரகசிய உறவுகள்

சபை அறியா சங்கீதங்கள் எத்தனையோ உண்டு. கடை தெரு வராத கத்திரிக்காய் பல உண்டு. சொல்ல முடியாத சொந்தங்கள், பகிர முடியாத பந்தங்கள் பல உண்டு.
இவர்கள் முகம் இருந்தும் முகம் காட்டா மனிதர்கள். ஏதோ ஒரு உறவுக்காக தன் வாழ்க்கையை முழுவதும்  தொலைத்தவர்கள். முகவரி அறிந்தும், முகவரியை சொல்லாத மானுடங்கள்.

அவனும், அவளும் ஆத்மார்த்தமான காதலர்கள். உள்ளத்தால் இனைந்தவர்கள், உடலாலும் இனைந்தார்கள். இவர்களுடைய இந்த உறவு உலகம் அறியாது.
உறவுகளும் அறியாது. 
ஏன், அவர்கள் இருவருடைய நெருங்கிய நண்பர்கள் கூட அறியாத உறவு. சில சமயம் சிலர் வாழ்க்கையில் இப்படி நடப்பது உண்டு. காரண காறியம் காரணம் இன்றி  நடக்காது. ஆனால் சில காரணங்கள் மறைக்கபடுகிறது. ஏனோ இவர்கள் இருவரும் காரணம் இன்றி பிரிந்தார்கள். அவனுக்கு முறைப்படி திருமணம் நடந்தது. மெத்த படித்த அவள் அவன் கொடுத்த பொக்கிஷத்தை கலைக்காமல், கறுவுற்றாள், ஒரு நாள் பெண் குழந்தைக்கு தாயானாள். 
அவளுக்கு என்ற ஒரே சொந்தம் அவளுடைய அத்தை. அந்த புன்னியவதியும் இவளை தனிமரமாக ஆக்கிவிட்டு போய் சேர்ந்தாள். பொருளாதார பிரச்சினை பெரிதாக இல்லை என்றாலும், அவள் பெற்ற பெண் குழந்தையை வளர்க்க மிகவும் சிறமபட்டாள். பள்ளி,  கல்லூரி என தன் மகளை சேர்க்கும் போது அப்பா யார் என்று கேட்டப்படும் இடத்தில் இவள் எப்படி பூர்த்தி செய்வாள். காலம் அது மிக விரைவாக சென்றுவிட்டது. திருமணம் வயதை எட்டிவிட்ட மகளை ஆர தழுவி மகிழ்ந்தாள். ஆச்சரியம், அவளுடைய மகள்,  தன்னுடைய அப்பா யார் என்று இது வரை அவளிடம் கேட்டது இல்லை.

அவன் மிக பெரிய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் தன்னை ஐக்கிய படுத்தி , நகரின் மிக பெரிய பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றான். ஏனோ அவனுக்கு முறைப்படி ஆன திருமண வாழ்வில் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை.
அவன் நினைவில் அவனுடைய கடந்த கால வாழ்க்கையில்  நடத்த சம்பவத்தை அவன் மறக்கவில்லை. பல முறை அவன் அந்த உறவை புதுபிக்க போராடி தோற்றான். தோற்றதுக்கு காரணம், " என்னை சபை ஏற்ற உங்களுக்கு விருப்பம் இல்லை, மறைமுக வாழ்க்கை உங்களுடன் வாழ எனக்கு விருப்பமில்லை. உங்கள் புது வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன். காலம் ஒரு வேளை எதிர் காலத்தில் நாம் சந்திக்க நேர்ந்தால் அப்போது என்ன சூழ்நிலையோ யாருக்கு தெரியும். "  இப்படி, அவள் அவனிடம் அழுத்த திருத்தமாக கூறிய பின் அவனால் அவனின் மறைமுக உறவை தொடர முடியவில்லை.

இருபத்தைந்து வருடம் மின்னல் வேகத்தில் ஓடியது.  காலை நடைபயிற்சியில் இருந்து அவனுக்கு தீடிர் என தலைசுற்றல். மயங்கி விழுந்தான். மறைமுக மனைவியின் மகள்
தன் அதிகாலை உடற்பயிற்சி முடித்து வீடு திரும்பும் சமயம் இதை பார்த்து விட்டாள்.
அப்படியே அவனை காரில் ஏற்றி, நகரில் உள்ள ஒரு பெரிய மருத்துவ மனையில் சேர்த்தாள். அரைமணி நேரத்தில் அவன் தெளிவானான். பணக்கார வியாதி எல்லாம் உள்ள அங்காடியாக அவன் திகழ்ந்தான்.
அவளுக்கு நன்றி சொன்னான். அவள் ஒரு நாள் வீட்டிற்கு வருமாறு அவனை அழைத்தாள். அவனும் அவன் பங்கிற்கு அவளை தன் வீட்டிற்கு அழைத்தான்.
இவர்கள் இந்த நட்பு தொடர்ந்தது.
அவனை அவள் அங்கிள் என்று அழைத்தாள். காலதேவனின் கட்டளைபடி தானே எல்லாம் நடக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அவன் அவள் வீட்டிற்கு வந்தான். அவளுடைய அம்மாவை
அழைத்தாள் அவனை அறிமுக படுத்த,
அறையில் இருந்து வெளிப்பட அவள் அவனை பார்த்தவுடன் செய்வது அரியாது ஆச்சிரியம் கலந்த ஆனந்தம், அதே சமயம் அதை வெளிபடுத்த இயலா கைதியாக, ஏறகுறைய அவனும் அதே மனோநிலையில், ஆனால் அவனுக்குள் ஏக குற்ற உணர்வு.
ஒரு மாதிரியாக இயல்பு நிலையில் இருப்பதாக தன் மகள் எதிரே இருவரும் நடித்தனர். அவள் தான் தன் மகள் என்ற மிக பெரிய சந்தோஷம், ஆனால் நான் தான் அவளின் அப்பா என்று சொல்ல முடியாத மிக பெரிய வேதனை. தவறுகள் செய்பவன்,
அழுவது தவறுயில்லை. கடவுள் இப்படி தான் தண்டனை கொடுப்பார். ஒரு
கட்டத்தில் அவர்கள் வீட்டில் இருந்து அவன் விடைபெற்றான். வாசலுக்கு வந்தவன் மயங்கி விழுந்தான். மூச்சு, பேச்சு இல்லை.
மீண்டும் மருத்துவமனயில் அனுமதி.
அவசர சிகிச்சைக்கான பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அவனுடைய நிகழ்கால மனைவி, அவளுடைய சொந்தங்கள் எல்லோரும் மருவமனை வாயிலில் மிக சோகமாக. ரகசிய உறவில் பிறந்த மகள் தான் பம்பரமாக சுழன்று மருத்துவர்களிடம் அவன் உடலின் நிலைமையை அவ்வபோது தெரிந்து கொண்டாள். " ஆண்டி, அங்கிளுக்கு ஒன்னும் ஆகாது,  அவர் பூர்ண நலம் பெறுவார்" என்று அவனுடைய மனைவிக்கு தைரியம் சொன்னாள் இந்த இளம் புயல்.
ஒரு கட்டத்தில், மருத்துவர்கள், kidney failure,  kidney transplant இதற்கு ஒரே தீர்வு என்று சொல்லிவிட, நிகழ்கால மனைவின் ஒப்பாரி காதை பிளந்தது. இளம் புயல் தன் அன்னையிடம் இது பற்றி கூற, அவள் மனதிற்குள் உள்ள குமுறலை அவளிடம் காட்டாமல், பதில் ஏதும் கூறாமல் மவுனம் சாதித்தாள். தன் அன்னையின் இந்த செய்கை இளம் புயலுக்கு புதிராக இருந்தது.

இரவு , சரியாக பண்ணிரண்டு மணி.
அவள் தன் மகளை எழுப்பினாள். 
நான், அவருக்கு என் kidney யை தருகிறேன். உடனே ஏற்பாடு செய்.
இளம் புயல் அதிர்ச்சி அடைந்தாள்.
வேண்டாம் அம்மா,  நீ எனக்கு வேனும்.
அவள் தன் எடுத்து முடிவில் உறுதியாக இருந்தாள். இளம் புயல் மிக சோகத்துடன் சம்மதம் தெரிவித்தாள்.

அவனுக்கு kidney அறுவை சிகிச்சை வெற்றிகறமாக முடிந்தது. ஆனால் kidney கொடுத்த அந்த ரகசிய மனைவி
உயிர் துறந்தாள். சிலர் தன் வாழ்க்கையே தியாகமாகவே வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து விடுகின்றனர்.

டாக்டர் ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

நான் உங்களுக்கு என்  kidney யை கொடுத்தால் பெரிய தியாகி என நினைக்காதீர். ஒரு வேளை இந்த சமயத்தில் நான் இறக்க நேரிட்டால், என் மகளை, உங்கள் மகள் என்று யாரிடமும் தம்பட்டம் அடிக்காதீர்கள். குறிப்பாக என் மகளிடம் நான் தான் உன் அப்பா என்று தயவு செய்து சொல்ல வேண்டாம். அவளை மிக தைரியமாக வளர்துள்ளேன். அவள் உங்களை அங்கிள் என்றே அழைகட்டும்.
நம் உறவு ரகசியமாகவே இருக்கட்டும், அல்லது முடியட்டும்.

இப்படிக்கு

உங்கள் ரகசிய மனைவி.

- பாலு.



 
  

எழுதியவர் : பாலு (22-May-20, 5:23 pm)
சேர்த்தது : balu
Tanglish : ragasiya uravukal
பார்வை : 520

மேலே