டீ

டீ

" வேளச்சேரி வரியா"
" ஏறுங்க சார், போகலாம் "
" எவ்வளவு கேக்கர"
" மீட்டர் மேல நீங்களே போட்டு தாங்க சார்"
" பராவாயில்லையே, சென்னையில் இப்படி ஒரு ஆட்டோ காரர்றா"
" சார், யோரோ சிலர் செய்யர தவறுனால, எல்லா ஆட்டோ டிரைவரையும்  தப்பா நினைக்காதீங்க"
" நீ இதே ஊரா தம்பி"
" ஆமாம் சார், சென்னையில, திருவல்லிக்கேணி "
" நீங்க, சார்"
" திருச்சி, என் சின்ன பொண்ண, 
சென்னையில கல்யாணம் பண்ணி கொடுத்தேன். நேத்து சாயிந்திரம் அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதான் பார்த்துவிட்டு போகாலாம்னு"
" ரொம்ப நல்ல விஷயம்"
" உனக்கு எத்தனை பசங்க"
" பையன் ஒருத்தன், பொண்ணு கை குழந்தை "
" எப்படி இந்த தொழில் பராவாயில்லையா"
" ஆண்டன் புன்னியத்தில், உங்கள மாதிரி நல்லவங்களால, பொழப்பு பரவாயில்லை சார்"
" தம்பி காலையில் என்ன சாப்பிட்ட"
" காலையில் எப்பவும் சாப்பிட்டது இல்லை சார்"
" என்னப்பா அப்படி சொல்ர"
" காலை, வீட்டுக்கு பக்கத்தில் நாயர் கடையில் சூடா டீ, அது கூட பட்டர் பிஸ்கட்,  அவ்வளவு தான்"
" உனக்கு அப்ப பசிக்காதா"
" இல்ல சார், டீ அந்த அளவுக்கு எனக்கு பழகிடுச்சி"
" சரி, மத்தியம் என்ன சாப்பிடுவ"
" சவாரி வீட்டுக்கு பக்கத்தில் இருந்தால், வீட்டுக்கு போய் சாப்பிடுவேன், இல்லேன்னா, அதே டீ, பண், பட்டர் பிஸ்கட் "
" தம்பி, இப்படி சாப்பிட்டா,  அல்சர் தான் வரும்"
" பத்து வருஷமா ஆட்டோ ஓட்டுரேன்,  எல்லாம் பழகிடுச்சி சார்"
" நமக்கு, நாலு வேளை சாப்பிடனும், அப்ப தான் என் வயிறு அடங்கும்"
" சார், வேளச்சேரி, வந்திடுச்சு"
" இந்தா, இது மீட்டர் காசு, மேல நூறு வச்சிக்கோ"
"ரொம்ப நன்றி சார்"
" சரி, இங்கிருந்து உன் வீடு பக்கமா"
" இல்ல சார்"
" அப்ப, இன்னிக்கு, மதியம் வெறும் டீ தானா"
" ஆமா சார், டீ , எங்க மாதிரி ஏழை தொழிலாளிகளோட இரண்டர கலந்தது சார்"
" நான் வரேன் தம்பி, நல்லா இரு"
" நன்றி ஐய்யா"
- பாலு.  
    

எழுதியவர் : பாலு (22-May-20, 5:35 pm)
சேர்த்தது : balu
பார்வை : 18

மேலே