நினைவுகள்தோறும்

நினைவுகள்தோறும்
*****************

நினைவுகள்தோறும் சுமைகள் நினைத்தாலே கிளர்ந்தெழும்

திறந்த நெஞ்சம்
நிறைந்த வன்மம்

இறப்பு ஒன்றே
இறவாத வரம்

இல்லை எதுவும் இல்லையென்று கூறி

எல்லாம் இருந்தும் எதுவுமின்றி நடக்கிறார்

மனமில்லா பற்றை
மணமுடன் சூடி

மனத்தால் மயக்கி
பந்தத்தில் இருத்திறார்

துன்ப சுமையில்
விழும் போது

முள்ளு போட்டு கடந்து செல்கிறார்
முழுதாய் அறிந்து மூழ்கிவிடவே

வெட்கத்தில் மனம் வெந்து போகுதே

எழுதியவர் : அகிலன் ராஜா Canada (23-May-20, 10:47 pm)
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே