மருத்துவர்

தமதுயிர் பெரிதெனத் தனிமையி லிருப்பதை
-தவமென நினைப்பதை விட்டு
எமனுயிர் பெறவென வருகிற நிலையுள
-எளியவ ருடலையுந் தொட்டு
நமதுயி ருறங்கிடும் நடுவிர வதனிலும்
-நனிச்சிறப் புடன்பிணி கட்கு
சமத்துடன் சிகிச்சையு மளித்திடும் மருத்துவர்
-சகத்திறைக் கடுத்தவ ரன்றோ!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-May-20, 11:57 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 26

சிறந்த கவிதைகள்

மேலே