புதுமுக கவிஞனோ நீ

அன்பே !
நிமிடம் போதவில்லை உன்னை நினைக்க
நித்தம் உன் நினைவு !
உள்ளுக்குள் ஏதோ புதுவுணர்வு :
அன்பே !
கண்களால் பேசும் காதல் மொழியை
கற்று தந்தவன் நீதானே !
பிறகு -ஏன் மறுக்கிறாய்
கண்களால் வருவது காதல் இல்லையென்று :
உருவமில்லா காற்றோ நீ !
முதல் பார்வையில் மனதுக்குள் வந்தவன் நீ !
காதல் கண்களால் வருவதில்லை என்று கூறும்
புதுமுக கவிஞனோ நீ !
என் கண்கள் கண்ணீர் வடித்து
செவ்வானம் போல் நிறம் மாறிப்போனது :
தினம் உன்னை நினைத்து தேகம் தேய்பிறை நிலவினை போல் ஆனது
கனவிலும் உன் நினைவு
அப்போது சொல்வாயா உன் காதலை
எப்போதும் புரியும்
என் காதல் உண்மை என்று
உன் உயிருள்ளவள் மறைந்த பின்தானோ?.......
என் கள்வனே !

எழுதியவர் : Poomani (24-May-20, 12:20 am)
சேர்த்தது : Poomani
பார்வை : 44

சிறந்த கவிதைகள்

மேலே