261 புறங்கூறலால் உள்ளப் புன்மை வெளிப்படும் – புறங்கூறல் 3

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

உள்ளவங் கணங்கசிந் தோடல் போலொரு
கள்ளநெஞ் சினன்புறங் கழற லன்னவன்
உள்ளமார் புரையெலாம் ஒழுகி வாய்மொழி
வெள்ளமாய் வழிகின்ற விதத்தை மானுமே. 3

– புறங்கூறல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உள்ளத்திலுள்ள சாக்கடை எண்ணங்கள் கசிந்தோடுவதைப் போல, ஒரு வஞ்ச நெஞ்சு உடையவன் புறங்கூறுவது அவனுடைய உள்ளத்தில் எழும் தீமைகளெல்லாம் ஒழுக்கெடுத்து வாய்ச் சொற்களாக வெள்ளம் போல வழிந்தோடுவதற்கு ஒப்பாகும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார் .

அங்கணம் - சாக்கடை. புறங்கழறல் - புறங்கூறுதல். புரை - தீமை. மானும் - ஒப்பாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-20, 2:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே