262 மெய்யே புறங்கூறினும் வேண்டாப் பொய் ஆகும் – புறங்கூறல் 4

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

இன்னலே யேதிலார்க் கிழைக்கு மச்சொலே
முன்னமெய் யென்னினும் முழுப்பொய் போலுமாம்
அன்னவர் குறையினை யறிந்து மின்றெனப்
பன்னுபொய் மெய்யினும் பாடு டைத்தரோ. 4

– புறங்கூறல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”துன்பத்தையே பிறர்க்குத் தரக்கூடிய சொல், முதலில் உண்மை என்றாலும் முழுப்பொய் சொல்வதைப் போல கருதி புறங்கூறல் கூடாது. அவருடைய குற்றத்தை உணர்ந்தும், இல்லையென்று சொல்லும் பொய் உண்மையென்ற பெருமை உடையது” என்கிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-20, 2:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே