பொய்க்கு ஒப்பனை செய்தால்

பொய்க்கு ஒப்பனை
செய்தால் கவிதை
உன் புன்னகை
பொய்யானாலும் வெண்மை
உன் புன்னகை
உண்மையானாலும் வெண்மை
இந்த வெண்மைக்கு
ஒப்பனை செய்ய
என்னிடம் வண்ணங்களும் இல்லை
கவிதையும் இல்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (26-May-20, 9:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே