மிதிக்கும் கொரோனா

கேடுகெட்டக் கேட்டைக் காட்டுகின்றக்
-கேவலத்தின் உச்சம் கொரோனா
பாடுபட்டு ழைக்க வந்தபேரை
-படாதபாடு படுத்தும் கொரோனா
நாடுவிட்டு நாடு தாவினோர்க்கு
-நல்லபாடம் புகட்டும் கொரோனா
மூடுவாயை மூடு என்றுசொல்லி
-முடக்கிவைத்தத் தீயக் கொரோனா
**
வீடுவாசல் மனைவி பிள்ளைகளை
-விட்டுவந்த நாட்டில் கொரோனா
வாடுநீயும் வாடென் றேவாட்டி
-வதைக்கிறதே இந்தக் கொரோனா
கூடுசெல்லும் குருவி போல்பறந்து
-குலவவிடா திந்தக் கொரோனா
மாடுஏறி மிதித்தக் கதைபோலே
-மாறிமாறி மிதிக்கும் கொரோனா
**
*

எழுதியவர் : *மெய்யன் நடராஜ் (26-May-20, 10:02 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 61

மேலே