தமிழ்

தமிழ் 🙏

தொல்காப்பியன் கண்டெடுத்த
அழகிய காதலி
அவள் இடையினம்
மெல்லினம்
வல்லினமாய்
இயற்கையை கை கோர்த்த அவள்
இளமை மாறா இளந்தென்றலாய்
இனிமையுடன் பயணிக்கிறாள்
மலையிலிருந்து அருவியன கொட்டுகிறாள்
பெறும் ஆறாக ஓடுகிறாள்
மக்கள் சமுத்திரத்தில் கலந்துவிட்டாள்.

நாணலாய் வளைகின்றாள்
மலராய் பூக்கின்றாள்
தேனாய் சுவைகின்றாள்
அமுதாய் இனிக்கின்றாள்
வானம்பாடியாய் பறக்கின்றாள்.

அள்ள அள்ள குறையாத
அமுதசுரபியாய்
மூவேந்தர் ஆட்சியில்
முக்கிய பங்காற்றிய பாவையாய்
அறிஞர் பெருமக்களின்
அறிவு களஞ்சியமாய்
கவிஞர்களின் கனவு கன்னியாய்
காதலர்களின் உயிர் நாடியாய்
பேச்சாளர்களின் அஸ்திவாரமாய்
மாநிலத்தின் ஆக பெரிய அடையாளமாய்

முக்கனி சுவை உள்ள அவள்
முடிவில்லா புகழ் உள்ள அவள்
உலகம் போற்றும் உண்ணதம் அவள்
எங்களின் முகவரி அவள்
எங்கள் சுவாசம் அவள்
எங்கும் எதிலும் வியாபித்த
அவள் 'தமிழ்'
என்றும் எங்கள் உயர் அவள்.

- பாலு

எழுதியவர் : பாலு (26-May-20, 10:50 pm)
சேர்த்தது : balu
Tanglish : thamizh
பார்வை : 1603

மேலே