தத்து கொடுத்த குழந்தை
தத்து கொடுத்த குழந்தை .
" கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா"
" யோவ், வெளியே போயா, தண்ணீர் எல்லாம் கொடுக்க முடியாது"
" வாட்சு மேன் , அவரை உள்ள உடு"
" சார், கொஞ்சம் தண்ணீர் "
" நீ, யாரு"
" நான், இங்க பில்டிங் காண்டிராக்டல, கட்டிட தொழிலாளி, கொரானா காரணமா ,வேலை கிடையாது, அதான் எங்க சொந்த ஊர் நோக்கி புறபட்டோம்."
" சரி, தண்ணீர் மட்டும் போதுமா"
" சாப்பாட்டுக்கு பணம் இல்ல சாமி, வெய்யில், தாகம் உயிரே போகுது, தண்ணீர் கொடுத்தா குடிசுட்டு அப்படியே ஊரை பார்த்து நடப்போம்"
" உன் மனைவியையும், குழந்தையையும் அழைச்சுட்டு வா, ஒரு வாய் சாப்பிட்டு, அப்புறம் உங்க ஊரை பார்த்து நடங்க"
" சாமி, மெய்யாலுமா"
" அட, என்னப்பா, மனுசனுக்கு மனுசன் உதவலண்ணா, அப்புறம் இந்த மனித ஜென்மம் எதுக்கு "
" சரி சாமி இதோ கூட்டியாரேன்"
"சாமி, உங்க இந்த உதவியை மறக்க மாட்டேன் சாமி "
" அப்படி என்ன நான் பெரிய உதவி பண்ணிட்டேன்"
" யாரு சாமி, இந்த காலத்துல ,இப்படி வீட்டல வக்கார வச்சி, சாப்பாடு போட்டு, வழி செலவுக்கு பணம் எல்லாம் தருவாங்க"
" இது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல"
" சரி சாமி, நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்"
" பத்திரமாக போங்க"
" சாமி , என் பெண் குழந்தை உங்கள் சம்சாரம் கிட்ட கொஞ்ச நேரத்துல அப்படி ஒட்டிகிச்சு"
" குழந்தைன்னா , அவளுக்கு கொள்ள ஆசை "
" சாமி"
" சொல்லுப்பா"
" உங்க பசங்க எல்லாம் எங்க"
" எங்களுக்கு குழந்தைங்க கிடையாது "
" மன்னிக்கனும், தப்பா ஏதாவது கேட்டுயிருந்தா"
" நீ கேட்டதுல எதுவும் தப்பில்லை "
புலம்பெயர் தொழிலாளி மனைவியுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தான்.
" சாமி, நான் ஒன்று சொன்னா நீங்க கேப்பிங்களா"
" என்ன"
" எனக்கு மூனும் பெண் குழந்தைங்க, சாப்பாட்டுக்கே வழியில்லை, அதனால உங்கள் நிலைமையும் யோசிச்சு, இந்த முடிவு எடுத்தேன்"
" என்ன முடிவு அது"
" உங்க, சம்சாரம் கிட்ட இருக்கிற பெண் கை குழந்தையை நீங்களே வளர்த்துக்குங்க"
" நீ, என்னப்பா சொல்ர"
" ஆமா சாமி, வெட்கத்தை விட்டு சொல்றேன், அந்த சிசுவுக்கு பால் கூட கொடுக்க என் மனைவிக்கிட்ட சக்தியில்லை, வெளியில் பால் வாங்கி கொடுக்க காசு இல்ல, இப்படியே போனா, அந்த சிசு செத்து போய்டும், அதுக்கு பதில் நீங்க அந்த குழந்தையை வளர்த்தா
அது எதிர்காலம் நல்ல இருக்கும் "
" இப்படி திடிரென சொன்னா, எப்படி "
" சாமி, உங்களுக்கு இஷ்டமா, இல்லையா"
" தம்பி.. நீ.... எனக்கு....இஷ்டம் தான், ஆனா தான் பெற்ற குழந்தையை தாய் விட்டு கொடுப்பாளா"
" என் சம்சாரத்துக்கு இதுல வருத்தம் இருக்குது, ஆனா சிசு உயிர் முக்கியம் "
" அப்போ கொஞ்ச நாள் கழித்து குழந்தை நீ கேட்டா"
" சத்தியம், அந்த மாதிரி வரவே மாட்டேன்"
" நீ சொல்லிட்ட, உன் மனைவி "
" சாமி, அதான் சொல்லிட்டேன் இல்ல, நாங்க யாரும் இந்த குழந்தையை எதிர்காலத்தில் சொந்தம்னு சொல்ல மாட்டோம்"
" உறுதியா சொல்றியா"
" இறுதியாவும் சொல்ரேன் ஐய்யா"
" சரி, அப்ப இனி இந்த பெண் சிசு எங்க ராஜகுமாரி"
பெற்ற குழந்தையை கடுமையான
வறுமை காரணமாக தத்து கொடுத்து அந்த ஏழை தாய், அந்த பெண் குழந்தையை வாங்கி பலவாறாக முத்தம் கொடுத்து, கண்ணீருடன், அந்த பணக்காரர் மனைவிடம் குழந்தையை தத்து கொடுத்தாள்.
- பாலு.