ஈகைப் பெருநாள் வாழ்த்து

திருநீறு பூசாதவனுக்கும்
திருமுருகன் அருள் தருவான்

குல்லா அணியாதவனையும்
அல்லா பேணிக்காத்திடுவான்
சிலுவையின்றி அழைத்தாலும்
ஜீசஸ் இறங்கி வருவான்

கடவுளின் பார்வையில்
கருணைக்கு பேதமில்லை
மனிதனின் மறுதலிப்பில்தான்
மதவாதங்கள் பிறக்கின்றன

அறிஞர் அண்ணா கூறிய
அன்புரை யாதெனில்
ஒன்றே குலம்
ஒருவனே தேவன் - இந்த

உண்மையை உள்ளத்தால்
உணர்ந்தவனே மனிதன்

இறை எதுவானாலும்
ற்றிடுவோம் ஒருமனத்தால் - அந்த
நல்லிணக்கம் இருந்தால் போதும்
நாடு மணக்கும் நறுமணத்தால்


ஐந்து வேளை மனம் உருகி
அல்லாஹ்வை தினம் தொழுது
முப்பது தினங்கள் நோன்பிருந்து
முஹம்மது நபியின் வழிநடந்து
இயலாத உயிர்களுக்கு
இயன்றவரை உதவி செய்து
ஈகைப் பண்பு என்னும்
இயற்கை அன்பை - இந்த
அவனிக்கு எடுத்துரைக்கும்
முகமதிய முத்துக்களே

பிறை நோக்கும் இந்நாள் - உமக்கு
இறை நோக்கும் நன்னாளாய்
சிறந்திட வேண்டுமென்பதே என் அவா

அதன்பொருட்டுச் செய்கிறேன் து ஆ

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (29-May-20, 8:59 am)
பார்வை : 38

மேலே