மருத்துவ வெண்பா – முலாம் பழம் - பாடல் 62

நேரிசை வெண்பா

நீர்பெருகும் கட்டுடையும் நீங்காத வெப்பமறும்
பால்பெருகும் மங்கையர்பால் பஞ்சமிலை – சீர்பெருகும்
நல்லமு லாம்பழத்தை நாவினிக்கத் தின்றவருக்(கு)
அல்லல் இனியே(து) அறி. 62

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

நல்ல முலாம் பழத்தினால் நீர் பெருகும். நீர்ச்சுருக்கு நீங்கும். சூடு தணியும். பாலுண்ணுங் குழந்தையை உடைய மாதர்க்குப் பால் சுரப்புப் பெருகும்.

உபயோகிக்கும் முறை:

இந்தப் பழத்தின் மேற்றோலையும், விதையும் நீக்கிச் சிறு துண்டுகளாக அரிந்து, சர்க்கரை கூட்டி உண்ண ருசியாக இருக்கும். இதனால், உட்சூடு தணியும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-May-20, 12:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே