அவள் வரைந்த கோலம்🌹

அவள் வரைந்த கோலம்🌹

அவள் இரவு முழுவதும் விழித்திருந்து வானத்து வின் மீண்களை கூடையில் சேகரித்து
அந்த அழகிய நிலவையும் எப்படியோ
ஆசை வார்த்தைகளில் மயங்கி அழைத்து வந்து
அந்த அற்புத மார்கழி மாத அதிகாலை வேளையில்
நிலவை நடுவில் அமர்த்தி
கூடையில் அடைக்கபட்ட வின்மீண்களை அதை சுற்றி புள்ளிகளாக அமைத்து
அவள் வீட்டு வாசலில்
அழகான கோலம் இட்டாள்.

- பாலு.

எழுதியவர் : பாலு (29-May-20, 3:45 pm)
சேர்த்தது : balu
பார்வை : 78

மேலே