காதல்

சாரல் மழையில் சிதைந்து போகும்
சின்ன தூறல் போல சிதைகிறேன்
உன் நினைவுகள் தீண்டும் போதெல்லாம் ..
மௌனம் மட்டுமே உன் மொழி என்றால் ...
மாறிடுவேன் மார்கழி மாத பனி துளியாய்
உன் வீட்டு ரோஜா செடிகள் தேடி ...
ஊருக்கெல்லாம் ஊக்கம் தரும்
நீ என்னை மட்டும் எதிரி என பார்ப்பது எனோ ?
எண்ணில் அடங்க ஏக்கம் உண்டு ...
ஆனால் என்றும் இல்லை எல்லை மீறும் ஆசை ...
ஆரத்தழுவ அசையுமுண்டு
அம்மாவின் அக்கறை எதிர்பார்த்து ...
கோவம் கொண்டால் திட்டி விடு ..
ஆனால் கொள்ளாதே அமைதி என்னும் ஆயுதத்தால் ...
பூவே உன்னை ரசிப்பேன் தவிர
பசி தீர்க்க புசித்திட மாட்டேன் ....
மௌனம் கலைத்திடு தோழி மனம் திருந்தது பேசிவிடு நீ ...

எழுதியவர் : கதிர் .ந (29-May-20, 4:19 pm)
சேர்த்தது : நந்திதா
Tanglish : kaadhal
பார்வை : 58

மேலே