கடவுள்

இதயம் வைத்தான் இறைவன்
இந்த உடலில் ஆத்மா இயங்க
கூடவே மூளையை வைத்தான்
சிந்திக்க செயல்பட
வாய் தந்து அதில் இரு நாவும்
வைத்தான் இறைவன் பேசுவதற்கு
நம் குறையை 'அவனிடம்' சொல்லுவதற்கு
'அவன்' நாமம் பாடுவதற்கு
பகுத்தறிவு பண்பாளர்களே உங்களை
ஒன்று நான் கேட்பேன் ....
இதைப் பகுத்தறிந்து இறைவன் இல்லை
என்று கூறுகிறீர்கள் நீவீர்
இதை இதை செய்வதற்கு இது
என்று நினைத்து நம்முடலைப் படைத்தான்
இறைவன்...... இவை தானாக முளைக்கலையே
கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்...
அழகான மல்லிப்பூ, கண்ணைப் பறிக்கும் ரோசாப்பூ
சுவையான பலாப்பழம்.... இவற்றில் ஏதாவது
ஒன்றை உம்மால் படைத்தது காட்ட முடியுமா
சொல்லுங்கள் .....
நீங்கள் இறைவன் இல்லை என்று சொல்லும்போதே
உங்கள் உள்ளத்தில் ஏதோ ஓர் இடத்தில அவன்
'இருக்கின்றான்' என்று ஓர் குரல் ஒலித்துக்கொண்டே
இருப்பதை உங்கள் ஆணவம் மறைக்கின்றது
இந்த ஆணவத்தை துறந்து விடுங்கள்
உங்கள் முன் அவன் காட்சி தருவான்
கீதையில் கண்ணன் சொல்கின்றான்
மனித ரூபத்தில் கட்சி தருவதையே
'அவன்' பெரிதும் விரும்புகின்றான் என்று
நம்மில் எதனை மனிதரில் அவன் இருக்கிறானோ
யாரறிவார்......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-May-20, 5:22 pm)
Tanglish : kadavul
பார்வை : 81

மேலே