அன்பு

அழகழகாய் அழகு சொட்டும்
அழகியல் வாழ்க்கை ஒருபுறம்
அன்றாடம் அலைந்து தேடும்
அத்தியாவசிய வாழ்க்கை மறுபுறம்
எழவே முடியாமல் வீழ்ந்து வீழ்ந்து
வணங்கும் வாழ்க்கை மற்றொரு புறம்
புறம் மட்டுமே வாழ்வு
திறன் மாறும் தவிர
அகம் நோக்கும் வாழ்வு
அனைவருக்கும் அன்பு ஒன்றே

எழுதியவர் : நிரோஷனி றமணன் (29-May-20, 5:55 pm)
சேர்த்தது : நிரோஷா றமணன்
Tanglish : anbu
பார்வை : 68

மேலே