காதல்🌹

காதல்🌹

உதடுகள் உச்சரிக்க மறுக்கிறது.
உள்ளம் சொல்ல துடிக்கிறது.
நெஞ்சம் வரை வந்த சொல் ஏனோ, தொண்டை குழியில் சிக்கி தவிக்குது.
எனக்கு மட்டும் தான் அந்த போராட்டமா! இல்லை அவளுக்கும் அதை நிலை தானா.
வைத்த கண் வாங்காமல் அவள் பார்க்கும் அந்த பார்வை
இருக்கிறதே
அய்யகோ
என் சொல்வேன்
உடல் முழுவதும் ஆனந்த பரவாகம் ஆர்பரித்து ஓடும்.
இப்படியே ஒரு வருடம் ஓடி விட்டதே.
எத்தனை நாள் பார்வையால் மட்டும் காதல் செய்வது.
நெருங்கிய பொருள் கை பட வேண்டாமா.
என் உள்ளத்தில் உள்ள ஆசையை எப்படி அவளிடம் சொல்வது.
ஏன் அவள் மனதிலும் ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் சிறகடித்து பறக்காதா.
தள்ளி போடுவது தவறு
மனதில் பட்டதை பட் என்று இன்று அவளிடம் சொல்லிவிடுவேன்.

அதோ கண்ணதாசன் வர்ணித்த
மாதவி பொன் மயிலால் வருகிறாள்.
இவள் பண்ணிரண்டு வருடத்திற்கு பூக்கும் குறிஞ்சி மலரோ!
கம்பன் பாடிய மிதிலையின் சீதையோ!
மஞ்சள் வெய்யில் பட்டதும் பொன் என மின்னுகிறாள்.
ரம்பை, ஊர்வசி, மேனகை வழி வந்த வானத்தை தேவதையோ!
காளிதாசன் பாடிய அழகு சாகுத்தலையோ!
ஆண்டவன் படைப்பில் இவள் ஒர் அற்புதம்!
அவள் அருகில் வர, வர நா வரண்டு தொண்டை அடைத்தது.
துணிவே துனை!
அவள் அருகில் சென்றேன்.
வழக்கம் போல் பார்வையால் இதயத்தை தாக்கி பரவச படுத்தினாள்.
முதலில் காற்று வந்தது.
அதுவே வார்த்தையாக
என்னிடம் வரும் முன்பே
அவள் என் நோக்கி
கடிதத்தை நீட்டினாள்.
தென்றாலாக வந்தவள்
மின்னலன மறைந்து விட்டாள்.

கடிதத்தில் :-

அன்பரே,

உங்கள் நிலைமையும், என் நிலையும் ஒன்றே.
உங்கள் மீது எனக்கு அளவற்ற காதல்.
நீங்கள் தயங்குவதால்,
நானே என் காதலை வெளிபடுத்தும் நிலைமை.
ஏன் தயக்கம்.
காதல் நம்மை அழைக்கிறது.
காதல் செய்வோமா
- அன்பு காதலி.

தன்னை ஒரு முறை கிள்ளி பார்த்து கொண்டான்.
தரையில் நடக்கிறான்.
ஆனால் வானத்தில் பறக்கிறான்.
உறக்க , மிக உறக்க கத்தினான்.
"அவள் என்னை காதலிக்கிறாள்".
- பாலு.

எழுதியவர் : பாலு (29-May-20, 10:25 pm)
சேர்த்தது : balu
பார்வை : 116

மேலே