விளையாடும் மீன்கள்

ஹோவென' இரைச்சலாய்
அகன்று கீழிறங்கி
ஆற்றுக்குள் விழும்
அருவி
கீழ் தொடும்
தண்ணீரில் காத்திருக்கும்
மீன்கள் அருவியுடன்
கீழிறங்க ஆசைப்பட்டு
துள்ளி துள்ளி
மேல் வந்து
அருவியுடனே வழுக்கி
தண்ணீருக்குள்
விழுந்தது

கரையில் நின்று
பார்ப்பதற்கு
மீன்கள்
வட்ட வட்டமாய்
சுற்றி விளையாடுவது
போல் இருந்தது

எழுதியவர் : தாமோதரன். (31-May-20, 9:09 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : vilayadum meenkal
பார்வை : 35

மேலே