மோதிர விரல் மோதி விரல்

"'மோதிர விரல் மோதிர விரல்' இங்க வாம்மா".
@@@@@@
யாரை அண்ணா 'மோதிர விரல்'னு கூப்பிடறீங்க?
@@@#@@@@

அந்தப் பேரு உள்ள பொண்ணத்தான் கூப்புடறேன்.
@@@@@

என்ன அநியாயம்? ஒரு பெண் குழந்தைக்கு 'மோதிர விரல்'ன்னா பேரு வைக்கிறது? அந்தப் பொண்ணப் பெத்தவங்களுக்கு அந்தப் பேரை வைக்கிறதுக்கு எப்பிடி மனசு வந்துச்சு?

@@@@###
சரி தங்கச்சி. உங்க வீட்டு 'மோதிர விரல்' எங்க?

@@@@@@@
எங்த வீட்டில் அந்தப் பேருள யாருமே இல்லையே அண்ணா.

@@@@@
உம் பொண்ணு பேருதான் 'மோதிர விரல்'.

@@@@@@@
இல்லையே. அவபேரு அனாமிகா (Anamika = ring finger) தானே.

@@@@@@
அந்தப் பேருக்கு 'மோதிர விரல்'ன்னு தான் தங்கச்சி அர்த்தம்.

@@@@@@
அய்யோ அண்ணா, நாங்க மோசம் போயிட்டோம். இந்தப் பேருக்கான அர்த்தம் தெரிஞ்சா அவளோட வகுப்பு தோழிகளே அவளக் கிண்டல் பண்ணுவாங்களே. அக்கம் பக்கம் உள்ளவங்களும் என் மகளைப் பாக்கிறபோதெல்லாம் "அதோ அங்க வர்ற பொண்ணு பேருதான் 'மோதிர விரல்'"ன்னு சொல்லுவாங்களே. அதை எப்பிடி எம் பொண்ணு பொறுத்துக்குவா?

@@@@@@@
அவுளுக்கு பேரு வைக்கிறபோதே சொன்னேன். இந்திப் பேரை வைக்காதீங்க. தமிழ்ல அழகான பேருங்க ஆயிரக்கணக்கில் இருக்குது. அதில ஒரு பேரை வையுங்கன்னு சொன்னேன். நீயும் மாப்பிள்ளையும் எம் பேச்சைக் கேக்கல.

@@@@@##
அண்ணா இன்னைக்கே ஒரு வழக்குரைஞரைப் பார்த்து எம் பொண்ணுக்கு அழகான தமிழ்ப் பேரா வச்சு அதை அரசிதழில் வெளியிட ஏற்பாடு செய்யணும்.

@@@@@@
சரி. சரி. இப்பவாவது உனக்கு தமிழுணுர்வு வந்துச்சே. மிக்க மகிழ்ச்சிடா தங்கச்சி.

■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆■■■■■
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்.

எழுதியவர் : மலர் (31-May-20, 9:28 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 69

மேலே